கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது

Date:

Share post:

கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது – நடிகர் விஜய் பேச்சு

No one can take education away from you – Actor Vijay speech

மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சியில் அசுரன் பட வசனத்தை கூறி மாணவர்களை நடிகர் விஜய் உற்சாகப்படுத்தினார்.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம்.

நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

அசுரன் பட வசனத்தை கூறி மாணவர்களை உற்சாகப்படுத்திய விஜய்…

இந்த விழா நடத்துவதற்கான காரணம் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் உன்னிடம் இருந்து சொத்து, நிலத்தை எடுத்துக்கொள்ளலாம். கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப்பவர்கள் நீங்கள் தான்.

காசு வாங்கிட்டு ஓட்டுப்போடாதீர்கள் ஒருவர் ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவு செய்கிறார் என்றால் அவர் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

காசு வாங்கிட்டு ஓட்டுப் போட வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கூறுங்கள் என்று சொன்னார் விஜய்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...