தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஜூன் 17) உங்கள் ராசியின் பலன் இதோ..

Date:

Share post:

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஜூன் 17) உங்கள் ராசியின் பலன் இதோ..

Divine Vowing Horoscope: Today (June 17) Here is your Horoscope..

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ…

மேஷம்: 

காதல் உறவில் சந்தோஷமும், நிம்மதியும் நிலவும். உங்களது கெரியர் அல்லது பொருளாதாரத்தை பொறுத்தவரை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்.

விரைவில் வெற்றியை ருசிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துவது நல்லது.

ஒரு சில சவால்களை சந்திக்க நேரிடலாம். எனினும், மன தைரியத்துடன் அதனை எதிர்த்துப் போராடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட நிறம் இண்டிகோ. செல்லும் வழியில் மயிலிறகு தென்படுவது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

ரிஷபம் : 

ஒரு புதிய உறவு கிடைக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் உறவு வலுப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

உங்களது முதலீடுகள் மற்றும் செலவழிக்கும் பழக்கங்களில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களது உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கான முயற்சிகளை எடுங்கள்.

ஒரு சில பயணங்களை மேற்கொள்வது உங்களுக்கு வாய்ப்புகளை பெற்று தரும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 66, அதிர்ஷ்ட நிறம் பிங்க். ருத்ராட்ச கொட்டையுடன் வழிபடுவது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

மிதுனம்: 

மனம் விட்டு பேசுவது உறவுகளை வளர்க்க உதவும். உங்களுக்கும் பிறருக்கும் உண்மையாக இருங்கள்.

வேலையில் புதிய வாய்ப்புகள் மற்றும் யோசனைகள் மலரலாம். பணம் செலவழிக்கும் பழக்கம் மற்றும் முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

உங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். கூட நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 26, அதிர்ஷ்ட நிறம் பிரவுன். நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் தனித்து செயல்படுவது அதிர்ஷ்டத்தை தரும்.

கடகம்: 

உங்கள் காதலர் அல்லது காதலியுடன் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இயற்கையாக நிகழும் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் நல்வாழ்விற்கு பலனளிக்கும் வகையில் போதுமான ஆதரவு தரும் உறவுகள் உங்களை சுற்றி இருப்பார்கள்.

பயணங்கள் செல்வது புதிய நபர்களை சந்திக்கவும், அனுபவங்களை பெற்றுத் தரவும் உதவும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 17, அதிர்ஷ்ட நிறம் சில்வர். புது வரவு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

சிம்மம்: 

வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் காணப்படும். நீங்கள் நினைப்பதை தெளிவாகவும், நேர்மையாகவும் உங்கள் துணையிடத்தில் தெரிவித்து விடுங்கள்.

உங்கள் கெரியரில் எதிர்பாராத விதமாக வாய்ப்புகள் வந்து சேரும். அவற்றை பொறுமையாகவும், நிதானமாகவும் கையாளுங்கள்.

அக்கம் பக்கத்தில் நடைபெறும் சிறு சிறு திருட்டுகள் குறித்து கவனமாக இருங்கள். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 25, அதிர்ஷ்ட நிறம் நீளம்.

வேலை செய்யும் மேசை மீது டேபிள் காலண்டர் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

கன்னி: 

உறவுகளுக்குள் சமநிலை நிலவும். வாக்குவாதம் செய்யும் இரு நபர்களை சமாதானம் செய்து வைக்கலாம். உங்களது பழைய முதலீடுகளில் இருந்து லாபத்தை பெறுவீர்கள்.

புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு, ஆன்மீகம் சார்ந்த நபர்களை சந்திப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 4, அதிர்ஷ்ட நிறம் பீச். பேன்சி லாம்ப்ஷேடை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

துலாம்: 

உங்கள் காதலி அல்லது காதலரிடம் மனம் விட்டு பேசுங்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பொருளாதார முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிப்பீர்கள்.

நேர்மறையான மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 18, அதிர்ஷ்ட நிறம் லைலாக், அதிர்ஷ்ட அடையாளம் நுண்கலை (abstract art).

விருச்சிகம்: 

உங்களது நேர்மையான குணத்தின் மூலமாக புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். மேற்படிப்பு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வெற்றி பெறுவதற்கு பிறரிடம் இருந்து உங்களுக்கு தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ள தயாராக இருங்கள்.

உங்கள் உடல் மற்றும் மனதின் நல்வாழ்வு கருதி உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை கவனமாக கையாளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட நிறம் சையன், அதிர்ஷ்ட அடையாளம் ஃபுளோரல் டிசைன் .

தனுசு: 

உங்கள் காதலர் அல்லது காதலியுடன் உணர்ச்சி ரீதியாக நெருக்கமாவீர்கள். வெற்றி பெறுவதற்கான புதிய வாய்ப்புகளை கண்டுபிடிக்க புத்தாக்க முறைகளை கையாள்வீர்கள்.

உங்கள் உள் மனது சொல்வதை கேளுங்கள். புதிய அனுபவங்கள் மூலமாக அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள்.

புதிய இடங்களுக்கு பயணிப்பதன் மூலமாக சுய முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 77, அதிர்ஷ்ட நிறம் சாஃப்ரான் ஆரஞ்சு, உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் டீக்வுட் டேபிள்.

மகரம் : 

புதிய காதல் மலர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே காதலித்து வருபவர்கள் உறவு வலுப்பெறும்.

நேர்மையாகவும் மனதில் பட்டதை தெளிவாக பேசுவதும் சரியான நபர்களை உங்களுக்கு அடையாளம் காட்டும். உங்களது இலக்குகளில் கவனம் செலுத்தி, உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வையுங்கள்.

உங்கள் துறையில் உள்ள அனுபவமிக்க நபர்களின் உதவியை நாடுங்கள்.

புதிய பயணம் செல்வதன் மூலமாக உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளவும், உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நேரம் கிடைக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 22, அதிஷ்ட நிறம் க்ரீம், அதிர்ஷ்ட அடையாளம் காபிமக்.

கும்பம் : 

உங்கள் காதல் வாழ்க்கையில் அளவு கடந்த நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உணர்வீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும்.

உங்கள் திறன் மீது சந்தேகமோ அல்லது அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள். உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 45, அதிர்ஷ்ட நிறம் பிரவுன், அதிர்ஷ்ட அடையாளம் மணி பிளான்ட்.

மீனம் : 

புதிய காதல் மலர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலையில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் அவற்றை சமாளித்து வெற்றி பெறுவதற்கான ஆதரவை பெறுவீர்கள்.

கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகலாம். பயணம் செய்வது உங்களுக்கு புதிய அனுபவத்தையும், வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 3, அதிர்ஷ்ட நிறம் கிரே, அதிர்ஷ்ட அடையாளம் கிரீப்பர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...