கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை பண்ணுங்க

Date:

Share post:

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை பண்ணுங்க

வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது குறித்த பல்வேறு தகவல்களை விழுப்புரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் சண்முகம் கூறியுள்ளார்.

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குடையை கொண்டு ஓரளவிற்கு உடம்பை தற்காத்து வேலைக்கு சென்று வருகின்றனர்.

மேலும் வெப்ப சலனத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குளிர்பானங்கள், கூழ் போன்றவற்றை சாப்பிட்டு, வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் மருத்துவர்கள் அறிவுரையின்படி, எந்த நேரத்தில் வெளியே வரவேண்டும் என்பது பற்றியும், எப்படிப்பட்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் கிழக்கு பாண்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது டாக்டர் சண்முகம் சித்தா மருத்துவ கிளினிக்.

இந்த வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது குறித்த பல்வேறு தகவல்களை நம்மிடம் சித்த மருத்துவர் சண்முகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் நன்னாரி (சப்ஜா ) விதையை அரை டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் அடிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டு சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மற்ற பழங்களை சாப்பிடுவது போன்று தேங்காய் பூவும் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இப்பூ வெயில் காலத்தில் சிறந்த உணவாகும்.

தோலை காக்கும் தேங்காய் எண்ணெய்

அதேபோல் தோல்களில் மற்ற லோஷன்கள் தடவுவதை விட இயற்கை முறையில் கிடைக்கும் தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

அதிலும் குறிப்பாக இந்த பருவத்தில் கிடைக்கக்கூடிய நுங்கு பழங்களை சாப்பிடுவதும் சிறந்தது.

துர்நாற்றம் போக இதை பண்ணுங்க

மேலும் இது வேர்க்குரு, தோல் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும்.

சந்தனம் கிடைத்தால் அதனை ஊற வைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் உடல் சூட்டை தணிக்கும். மேலும் உடலில் வீசும் துர்நாற்றமும் போகும்.

மேலும் வெயில் காலத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் அதிகளவில் தலையில் பிசுபிசுப்பு ஏற்பட்டு டான்ட்ரஃப் மற்றும் தலை முடி உதிர்வு ஏற்படும்.

அதனை தடுப்பதற்கு, எளிதில் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், தேவையான அளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் தலையில் உள்ள டான்ட்ரஃப் நீங்கி முடி உதிர்வு மற்றும் உடல் சூட்டை தணிக்கும்.

நீர்மோர் முக்கியம்

மேலும் முக்கியமாக நீர்மோர் அதிக அளவில் பருக வேண்டும்.  வெயில் காலத்தில் இளநீர் குடிப்பது சிறந்தது.

அதிலும் இளநீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து குடித்தால் மிகவும் நல்லது. மேலும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீராவது பொதுமக்கள் குடிக்க வேண்டும்.

இந்த அனைத்து விஷயங்களும் வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து வெயிலிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழிமுறைகள் ஆகும்.

மேலும் அது மட்டுமல்லாமல் மருந்தகத்தில் நன்னாரி மணப்பாகு மற்றும் மாதுளை மணப்பாகு என சித்த  மருந்துகளும் விற்கிறது. இதனையும் எடுத்துக்கொண்டால் சிறந்ததாகும்” என கூறினார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...