10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா பப்பட் சாட்

Date:

Share post:

10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா பப்பட் சாட்

ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குச் சத்து நிறந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

இன்று ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பஞ்சாபி மிளகு அப்பளம் – 5 (பெரியது)

வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 100 கிராம்

வெள்ளரிக்காய் – 1,

கேரட் – 2

கொத்தமல்லி – தேவையான அளவு

ஓமப்பொடி – 2 கப்

சாட் மசாலா – 3 டீஸ்பூன்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

அப்பளத்தின் இரு புறமும் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து நன்கு சுட்டெடுங்கள்.

மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் கேஸ் அடுப்பில் சூட்டுக்கொள்ளலாம்.

அப்பளம் லேசாக ஆறியதும் அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துருவிய கேரட் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பரப்புங்கள்.

அதன் மேல் தேவையான சாட் மசாலா, உப்பு, சர்க்கரையைத் தூவுங்கள்.

கடைசியில் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி அலங்கரியுங்கள்.

சூப்பரான மசாலா பப்பட் சாட் ரெடி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் சாட் இது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...