மீண்டும் தொடங்கிய தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு.. அனுமதி வழங்கிய ஆட்சியர்

Date:

Share post:

மீண்டும் தொடங்கிய தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு.. அனுமதி வழங்கிய ஆட்சியர்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே நடைபெற்று வருகிறது.

எவ்வித அனுமதியும் பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக கூறி சமீபத்தில் படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.

நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

பின்னர் அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய அனுமதி பெற்றார்களா என்று விசாரித்தார். ஆனால் படக்குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவினர் முறையான அனுமதி வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நாளை அதே இடத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...