லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

Date:

Share post:

லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

செக் மோசடி வழக்கில் தண்டனையை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி செய்த மேல்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

லிங்குசாமிக்கு நிபந்தனையுடன் விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்,

கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது. அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 35 லட்சத்தை காசோலையாக அவர்கள் திருப்பி வழங்கினர்.

அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. அதையடுத்து லிங்குசாமி, அவரது சகோதரர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி தீர்ப்பளித்தார்.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம், கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தது.

லிங்குசாமி இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது காசோலை தொகையில் ஏற்கனவே 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளதாகவும், மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராகவுள்ளதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 20 சதவீதத்தை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் லிங்குசாமிக்கு விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...