அடிக்கும் வெயிலில் உடல் சூட்டை குறைக்க இந்த அற்புத பானம் !

Date:

Share post:

வெயிலின் உக்கிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நேரங்களில் விரைவாக உடலில் நீர்சத்து குறையும்.

அப்படி உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்கும் ஒரு அற்புத பானம் ஒன்று உள்ளது. அது உங்கள் அனைவருக்கும் தெரிந்த மோர்.

தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். தயிரை விடச் சிறந்தது. மோர் எளிதில் ஜீரணமாகக் கூடியது. அது மட்டுமா இன்னும் பல ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் பொதிந்து கிடக்கிறது இந்த மோரில்.

செலவு குறைவு, ஆனால் ஆரோக்கியமோ எண்ணிலடங்கா. அன்றைய காலங்களில் வெயிலில் களைத்து வீட்டிற்கு வருபவர்களுக்கு மோர் கொடுக்கும் பழக்கம் நம்முடைய மக்களிடம் இருந்து வந்துள்ளது.

பணம் இல்லாத ஏழை எளிய மக்களிடம் கூட இருந்துவந்த இந்த பழக்கம் இப்போது பெரும் செல்வம் இருப்பவர்களிடம் கூட பலரிடம் இருப்பதில்லை.

அன்றைக்கு விருந்தோம்பல் எப்படி இருந்திருக்கிறது பாருங்கள்.அது மட்டுமல்லாமல் இன்று இந்த மோர் குடிக்கும் பழக்கமே குறைந்து விட்டது.

காசு அதிகம் கொடுத்து அழகையும், ருசியையும் அதிகம் காண்பிக்கும் பானங்களே மக்களின் முதல் தேர்வாக இப்பொழுது இருக்கிறது.

இந்திரனுக்கு கூட கிடைக்காத அற்புதம் என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம்.

அப்படி என்றால் எவ்வளவு மகத்துவம் கொண்டது பாருங்கள்.மிக அளவான உப்பு சேர்த்து ஓரிரு குவளை மோர் அருந்துவது கோடை வெப்பத்திலிருந்து உங்களை அதிக அளவில் பாதுகாக்கும்.

உப்பை முடிந்தவரை மிகவும் குறைவாக உபயோகியுங்கள்.

கூடவே இதில் இஞ்சி, சீரகம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலந்து குடித்தால் நல்ல சுவையும் கூடவே அதிக ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

எலக்ட்ரோலைட் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் இதனை கோடையில் நீங்கள் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

நீர்ச்சத்தும் உங்கள் உடலில் குறையாது.

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் வைட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம். உடல் எடையை குறைக்க வல்லது மோர்.

உணவு உண்ட பின்னர் ஒரு குவளை நீர் மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் ஜீரணமாகி உடலை சீராக வைக்கும். ஜீரண பிரச்சனைகள் இருப்பவர்கள் மோர் எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும், வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் மிகப் பெரிய அளவில் உதவும்.

வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். அவர்கள் உடனே மோர் தொடர்ந்து குடித்து வர அந்த எரிச்சல் நீங்கி விடுபடுவார்கள்.

ஆகையால் இப்படிப்பட்ட ஏராளமான நன்மைகளை கொண்ட இந்த மோர் இந்த கோடை காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளையும் உங்களுடைய உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும், வெயிலின் சூட்டை குறைக்கவும் செய்து நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...