சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலாவின் உடல் நிலை குறித்த தகவல் !

Date:

Share post:

தமிழில் அன்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் வீரம், தம்பி, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.
மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் இவர் சமீபத்தில் கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட பாலா தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவிருப்பதாகவும் மரணம் கூட நேரலாம் எனவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் அந்த வீடியோவில் தன் மனைவியைப் பார்த்து, எனக்கு ஏதாவது நேர்ந்தால் நீ நடிகரை திருமணம் செய்துகொள்ளாதே என்றும் அறிவுரை வழங்கியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது மனைவி எலிசபெத்துடன் எடுத்துக்கொண்ட படத்தை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பாலா பகிர்ந்திருக்கிறார். அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்

கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலா, அவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு எலிசபெத் உதயன் என்ற டாக்டரை மறுமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...