சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது !

Date:

Share post:

வந்தே பாரத்

வந்தே பாரத்

சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

6 மணி நேர பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை.

இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோவைக்கு இரு திசைகளிலும் இயக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்  ரயில் (எண்: 20644) கோயம்புத்தூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடைகிறது.

வழியில் திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு வந்து 6.37 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டை 7.12 மணிக்கு அடைந்து 7.15 மணிக்கு புறப்படும்.

காலை 7.58 மணிக்கு சேலத்தை அடைந்து 8 மணிக்கு புறப்படும்.

எதிர் திசையில், சென்னை சென்ட்ரல்-கோவை ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20643) சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும்.

வழியில், மாலை 5.48 மணிக்கு சேலம் வந்து 5.50 மணிக்கு புறப்படும் ரயில், 6.32 மணிக்கு ஈரோடு வந்து 6.35 மணிக்கு புறப்படும்.

இரவு 7.13 மணிக்கு திருப்பூரை அடைந்து 7.15 மணிக்கு புறப்படும்.

சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கோவை வரையிலான ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்ரல் 8-ஆம் தேதி (நாளை) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

 

பொன்னியின் செல்வன் பாகம் 2-ன் மூன்றாவது பாடல் சிவோஹம் வெளியானது
பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/04/13/the-third-single-from-ponniyin-selvan-part-2-shivoham-is-here/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...