குடும்பப் பெண்களும் பெண் தொழிலதிபர் ஆகலாம்

Date:

Share post:

குடும்பப் பெண்களும் பெண் தொழிலதிபர் ஆகலாம்

குடும்பப் பெண்களும் பெண் தொழிலதிபர் ஆகலாம்

திறமை இருந்தால் குடும்பப் பெண்களும் பெண் தொழிலதிபர் ஆகலாம். அதில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வேலூரைச் சேர்ந்த ராஜிதான் உதாரணம்.

இவர் பெரிய டிகிரி எல்லாம் படிக்கவில்லை. எட்டாம் வகுப்புதான் படித்துள்ளார்.

ஆனால் தனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும் என்று நினைத்த ராஜி வீட்டில் இருந்தபடியே பொடி வகைகளை தயாரித்து வருகிறார்.

கடந்த 20 வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரின் பொடி வகைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரபல ஓட்டல்களுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தன்னுடைய தொழில் வளர்ந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டார். குடும்பப் பெண்களும் பெண் தொழிலதிபர் ஆகலாம்.

* சமையல் மேல் ஆர்வம் வந்தது எப்படி?

நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி அருகில் உள்ள மூலக்கரைப்பட்டி கிராமத்தில். அப்பா ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார்.

புதுக்கோட்டை ஆலங்குடியில் எங்களின் ஓட்டல் இயங்கி வந்ததால், நாங்க அங்கு செட்டிலாயிட்டோம்.

வீட்டில் எப்போதும் சாப்பாடு குறித்த பேச்சுதான் இருக்கும்.

இன்று என்ன மெனு போடலாம், திருமண ஆர்டர்களில் என்ன உணவு புதிதாக இணைக்கலாம்னு வீட்டில் அப்பா, அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்.

எப்போதும் வீடே உணவு வாசனையுடன் இருந்ததால், எனக்கு சின்ன வயசில் இருந்தே சமையல் மேல் தனிப்பட்ட ஆர்வமுண்டு.

மேலும் என் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்களிடம் தான் சமைக்கவே கற்றுக் கொண்டேன்.

* சமையல் பொடிகள் தயாரிப்பில் எப்போது ஈடுபட ஆரம்பிச்சீங்க?

நாங்க ஓட்டல் பிசினஸ் என்பதால் எனக்கும் அதே தொழில் சார்ந்தவருடன்தான் திருமணம் நடைபெற்றது.

வேலூரில் பிரபல உணவகத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்த பாரதி என்பவருடன் எனக்கு திருமணமானது.

கணவரும் ஹோட்டல் துறையை சார்ந்து இருந்ததால் எனக்கு இந்த தொழில் துவங்க ரொம்பவே எளிதாக இருந்தது.

மேலும் எனக்கும் சின்ன வயசில் உணவு குறித்து சிறிய அளவில் பிசினஸ் செய்யணும்ன்னு விருப்பம் இருந்ததால் என் விருப்பத்தை என் கணவரிடம் சொன்னேன்.

அவர் தான் நான் காலை முதல் இரவு வரை ஓட்டலில் இருக்கிறேன்.

நீ வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் நல்ல லாபம் தரும் பிசினஸ் செய் என்று ஆலோசனை வழங்கினார்.

எனக்கும் அது தான் சரி என்று தோன்றியது.

ஆனால் அந்த சமயம் நான் கருவுற்றதால் என்னுடைய பிசினஸ் கனவினை சில காலம் தள்ளி வைத்தேன்.

என் மகன் வளர்ந்ததும் மீண்டும் என் விருப்பத்தை கணவரிடம் சொல்ல அப்படித்தான் என்னுடைய பொடி பிசினஸ் ஆரம்பமாச்சு.

2002ல் முதன் முதலில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு அரை கிலோ இட்லி பொடியை தயாரித்தேன்.

இதை என் கணவரின் துணையுடன் ஓட்டல் ஒன்றுக்கு கொடுத்தேன்.

அதன் சுவை வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப் போனதால், அந்த ஓட்டல் நிர்வாகி மீண்டும் என் கணவரை அணுகி பொடி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்படித்தான் என் பொடி தொழில் உதயமானது.

இட்லி பொடிதான் என் வாழ்வில் ஏற்பட்ட மிகவும் இனிமையான திருப்புமுனைன்னு சொல்லணும்.

ஆர்டர்கள் அதிகரிக்க என்னால் மட்டுமே தனித்து செயல்பட முடியவில்லை அதனால் இரண்டு பெண்களை வேலைக்கு நியமித்தேன்.

இட்லிப்பொடியினைத் தொடர்ந்து எள்ளுப்பொடி, சாதத்துடன் சாப்பிடக்கூடிய பருப்புபொடி, பூண்டுப் பொடி என நான்கு பொடிகளை தயாரித்தேன்.

அதனை நூறு கிராம், இருநூறு கிராம் பேக்குகளில் அடைத்து ‘சூப்பர் ஹோம் புட்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு ஓட்டல் இரண்டானது, நான்கானது… இப்போது தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள முக்கிய ஓட்டல்களுக்கு நாங்க தான் இந்த நான்கு பொடியினை கடந்த 20 ஆண்டுகளாக சப்ளை செய்து வருகிறோம்.

* தொழிலில் சந்தித்த பிரச்னைகள்?

எந்த தொழிலாக இருந்தாலும் புதிய அறிமுக தயாரிப்புகளுக்கு எளிதில் வரவேற்பு கிடைத்து விடாது. எங்களின் பொருட்களை மக்கள் மத்தியில் நிலைக்க செய்யவே ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கோம்.

ஆரம்பத்தில் எங்கள் பொடிகளிலும் குறைகளை சுட்டிக் காட்டிய சில வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் நான் ஒதுக்கிடாமல், அவர்களையும் எங்களின் வாடிக்கையாளர்களாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து அதன் படி தயாரிப்பு முறையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்தேன்.

அந்த சுவை அவர்களுக்கு பிடித்துவிட, வேண்டாம் என்று ஒதுக்கியவர்களும் இப்போது எங்களின் ரெகுலர் வாடிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள்.

* வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்கள்?

என் கணவர் மற்றும் என் மகன் இருவருமே எனது தயாரிப்பு பொருட்களின் தரம் நிலைக்க, விற்பனை அதிகரிக்க உதவி வருகிறார்கள்.

மேலும் என்னிடம் வேலை பார்ப்பவர்கள். இவர்கள் இல்லை என்றால் என்னால் ஆர்டர்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை தயாரித்து கொடுத்திருக்க முடியாது. என்னுடைய எல்லா காலங்களிலும் அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

சில நாட்கள் இரவு பகல் பார்க்காமல் பொடிகளை தயாரிக்க வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் என்னிடம் வேலைப் பார்க்கும் இருவருமே பக்க பலமாக இருந்தார்கள்.

அதன் பிறகு மதுரை ‘டெம்பிள் சிட்டி’ ஓட்டலின் அதிபர் குமார் அவர்கள்.

நான் பொடி தயாரிக்க ஆரம்பித்த காலம் முதல் என்னிடம் இருந்து தான் பொடியினை வாங்கி வருகிறார். எந்த ஒரு கலப்படம் இல்லாமல் நாங்க தயாரிப்பதால் அவருக்கு அதன் தரம் மற்றும் சுவை ரொம்பவே பிடித்து போனது.

அவர் மதுரை ஓட்டல்களின் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதால், அவர் மூலமாக பல ஓட்டல்களுக்கு ஆர்டர் கிடைத்தது.

இப்போது அந்த ஓட்டல்களுக்கும் என்னுடைய பொடியினை சப்ளை செய்து வருகிறேன்.

*எதிர்கால லட்சியம்… குடும்பப் பெண்களுக்கு உங்களின் அறிவுரை?



என் கணவர் ஓட்டல் தொழிலில் இருந்தாலும், நான் படிப்படியாகத்தான் என்னுடைய தொழிலில் முன்னேறினேன். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதனை பெரிய நிறுவனங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்றில்லை.

சாதாரண மக்களுக்கும் நம்முடைய பொருளும் சென்றடைய வேண்டும். அந்த எண்ணத்தில் தான் நாம் தொழிலினை துவங்க வேண்டும். ஆரம்பத்தில் சில நஷ்டங்களை கண்டு துவண்டு விடாமல், தொடர்ந்து முயற்சித்தால் கண்டிப்பாக லாபம் பார்க்க முடியும்.

என்னைப்போல் வேலைக்கு போகாத குடும்பப் பெண்கள் அவர்களின் திறமைக்கு ஏற்ற சுயதொழில்களை தயங்காமல் நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக வெற்றி ெபற முடியும். வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் ஈட்டலாம்.

என்னுடைய எதிர்கால திட்டம், என் மூலம் பல பெண்களுக்கு தொழில் ஏற்படுத்தி தரவேண்டும்.

ஓட்டலுக்கு பொடிகளை தயாரித்து தருவது போல் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு என் பொடியினை தயாரித்து கொடுக்கும் போது, அவர்கள் அதை விற்பனை செய்வது மூலம் மாதம் ஒரு வருமானம் பார்க்க முடியும்.

அதற்கான வேலையில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார் ராஜி.

 

கிச்சன் டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/01/18/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-2/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...