கவுன்சலிங் ரூம் – மருத்துவப் பேராசிரியர் முத்தையா

Date:

Share post:

கவுன்சலிங் ரூம்

கவுன்சலிங் ரூம்

கொழுப்புக்கட்டிகள் என்பவை தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புத்திசுக்களின் திரட்சியால் உருவாகின்றன.

பரம்பரை காரணமாக சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

சிலருக்கு ஒரு இடத்தில் தோன்றினால், வேறு இடங்களிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

இந்தக் கொழுப்புக்கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுமோ என்று சிலர் அஞ்சுகிறார்கள்.

அப்படி அச்சப்படத் தேவை இல்லை.

பெரும்பாலானவர்களுக்கு லைப்போமா கட்டிகளால் எந்த தீங்கும் நேர்வது இல்லை.

பொதுவாக,தோற்ற அழகைக் கெடுக்கிறது என்பதற்காகவே இவை நீக்கப்படுகின்றன.

அணியும் ஆடைகள் உருத்துவதாலும், ஏதேனும் பொருட்களில் மோதும்போது சிராய்ப்பு, காயம் ஏற்படுவதாலும் சிலருக்கு நீக்க வேண்டியது இருக்கும்.

கொழுப்புக்கட்டிகளை எளிய அறுவைசிகிச்சை மூலமே நீக்கிவிடலாம்.

உங்களுக்கு அடிப்புற புஜத்திலும் தோள்பட்டையிலும் இருப்பதாக சொல்கிறீர்கள்.

அந்த இடத்தில் சிக்கலான நரம்புகள் நிறைய உள்ளன என்பதால் அறுவைசிகிச்சை செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

அறுவைசிகிச்சை செய்யத்தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், தேர்ந்த அறுவைசிகிச்சை நிபுணரிடம் பரிசீலித்து சிகிச்சை பெறுவது நல்லது.”

கவுன்சலிங் ரூம் பற்றி தெரிந்துகொள்வோம்.

எனக்கு எண்ணெய் பசை சருமம் உள்ளது. இதை எப்படிப் பராமரிக்க?

எண்ணெய் பசை உள்ள சருமம்  தன்னம்பிக்கையையே குலைப்பது. இது, வளவளப்பான சருமத்தையும் சோர்வான தோற்றத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது.

முகத்தில் உள்ள சீபம் அதிகமாகச் சுரப்பதுதான் எண்ணெய் பசை உள்ள சருமத்துக்கு காரணம். பாரம்பரியம் உள்ளிட்ட சில முக்கியக் காரணங்கள் இருந்தாலும் சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய் பசை உள்ள சருமத்தை அழகாகப் பராமரிக்கலாம்.

1. சோப்பு மற்றும் கிளென்ஸர்கள்

சிலவகை சோப்புகள் மற்றும் கிளென்சர்கள் காரத்தன்மை அதிகம் உள்ளவையாக, கடினமானவையாக இருக்கும்.
இவற்றைப் பயன்படுத்துவதால், சருமம் மிகவும் உலர்வாகி மீண்டும் சீபம் அதிகமாகச் சுரக்கும். எனவே,  எண்ணெய் பசை சருமத்துக்கான பிரத்யேகமான சோப்புகள் மற்றும் கிளென்ஸர்கள் எதுவென அறிந்து அவற்றைப் பயன்படுத்துங்கள்.

2. ஃபேஷியல் மாஸ்க்

தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைக்கரு, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.


3. இரண்டு முறைக்கு மேல்முகத்தைக் கழுவாதீர்

பொதுவாக, எண்ணெய் பசை உள்ளவர்கள் அடிக்கடி முகத்தைக் கழுவுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள்.

இது மிகவும் தவறு. இப்படி செய்வதால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது.

வேண்டுமானால், ஒரு சுத்தமான டிஸ்யூ பேப்பரைக் கொண்டு முகத்தைத் துடைத்துக்கொள்ளலாம்.

4. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்

எண்ணெய் பசை சருமம் என்று மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் அதிகம்.

முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய்பசை சருமத்துக்கான பிரத்யேக மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம்.

5. அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள்

எண்ணெய் பசை உள்ள சருமத்தினருக்கு முகப்பருவால் பாக்டீரியா இருக்கும். நம் கைகள் மோசமான பாக்டீரிய கடத்திகள்.

இதைக்கொண்டு அடிக்கடி முகத்தை தொடும்போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தொற்று பரவிக்கொண்டே இருக்கும்.

எனவே, அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள். ஒருமுறை முகத்தைத் தொட்டதும் கை கழுவுங்கள்.

 

கண்வலி பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/01/06/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...