அனுக்ரீத்தி வாஸ் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்

Date:

Share post:

அனுக்ரீத்தி வாஸ் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்

அனுக்ரீத்தி வாஸ்

 

சமீபத்தில்  இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம்   டிஎஸ்.பி.  இதில்  கதாநாயகியாக நடித்து  ரசிகர்களின்  கவனத்தை  ஈர்த்துள்ளார்   நடிகை  அனுக்ரீத்தி வாஸ்.

இவர் 2018 ஆம் ஆண்டின்  மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர் ஆவார்.  உலக அழகி  போட்டியில் 30ஆவது  இடத்தைப் பிடித்தவர்.

இதைத்தவிர,  அத்லெட்,  விளம்பரப் பட மாடல்  என்ற  இன்னொரு முகமும் இவருக்கு உண்டு. இவரது  ஃபிட்னஸ்  ரகசியத்தை  நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார்:

 டயட்: 

என்னைப் பொருத்தவரை டயட்  என்ற பெயரில்  பட்டினியாக  இருக்க வேண்டும் என்பதில்லை.   முடிந்தளவு  ஜங்க்  உணவுகளை  தவிர்த்துவிட்டு,  பழங்கள் , காய்கறிகள்  என சரிவிகித ஆரோக்கியமான  உணவை எடுத்துக் கொண்டாலே   உடலை  கட்டுக்கோப்பாக  வைக்க முடியும்.

மற்றபடி  நம்முடைய  பாரம்பர்ய உணவுகள் அனைத்தும் நான் விரும்பி சாப்பிடுவேன்.


ஃபிட்னஸ்:

என்னுடைய ஃபிட்னஸ்  என்று எடுத்துக் கொண்டால், நான்  அடிப்படையில்  ஒரு அத்லெட்.  எனவே பள்ளிப் பருவத்தில்  இருக்கும்போது  கிளாஸ் ரூமில் இருந்ததைவிட,  அதிகமாக  ஸ்கூல்  கிரவுண்டில்தான்  இருந்திருக்கிறேன்.  எந்தப் போட்டியாக  இருந்தாலும், வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றி  யோசிக்காமல்  கலந்துகொள்வேன்.

இதைத்தவிர   விளையாட்டுக்கான  பயிற்சிகள்  தினமும் நடக்கும் அவ்வளவுதான். எப்போது  மிஸ் இந்தியாவிற்காக முயற்சி செய்ய  தொடங்கினேனோ, அதுமுதல் தான்  ஜிம் ஓர்க்கவுட் எல்லாம்  செய்ய  தொடங்கினேன்.

என்னுடைய  தினசரி  உடற்பயிற்சிகளில்  யோகாவும் ஒன்று, யோகா  மனதிற்கு அமைதி தருவதோடு,  உடலை  ஃபிட்டாக  வைத்துக் கொள்ளவும் மிகவும் உதவுகிறது. எனவே,  உடற்பயிற்சிக்கு  எவ்வளவு  முக்கியத்துவம் தருகிறேனோ அதே அளவு  என்னுடைய  தினசரிகளில்  யோகாவுக்கும் இடம் உண்டு.

அந்த வகையில், 5 விதமான  யோகாசனங்கள்  தினமும் கடைபிடிக்கிறேன். அவை, சுவாசத்தை சீராக்க உதவும்,   அனுலோம் விலோம் என்ற  மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுவேன். இந்த சுவாசப் பயிற்சி மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குணப்படுத்த உதவுகிறது, மேலும் எடை இழப்புக்கும் உதவுகிறது.

அடுத்ததாக,  போர் வீரன் போன்று கால்களையும் கைகளையும் ஒரு குறிப்பிட்ட முறையில் விரிப்பது. பார்ப்பதற்கு  மிகவும் எளிதாக தோன்றலாம்.  ஆனால், மிகவும் கடினமானது. இது மனதை அமைதிப்படுத்தவும், கணுக்கால் மற்றும் பாதங்களை பலப்படுத்தவும் உதவுகிறது.மேல்நோக்கி பார்த்தபடி செய்யும் பயிற்சி, இது தோள்களையும் கைகளையும் வலிமையாக்குகிறது.

மேலும் உங்கள் உடலை மேலிருந்து வயிற்றுத் தசைகள் வரை நீட்டுகிறது. மிகவும் பிரபலமான யோகா பயிற்சியான சூரிய நமஸ்காரத்திற்காக பின்பற்றப்படும் வரிசையில் இந்த  பயிற்சி இருக்கும்.

கீழ் முதுகு, மேல் முதுகு, தோள்கள் மற்றும் கைகளை வலுப்படுத்த உதவுவது ஹேண்ட்ஸ்டாண்ட் வடிவிலான யோகாசனம். இது உடலில் ரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது.

மேலும், இது நிணநீர் மற்றும் நாளமில்லா  சுரப்பி  போன்ற உடலின் பல்வேறு அமைப்புகளையும் மேம்படுத்துகிறதுஅடுத்தபடியாக, படகு வடிவிலான  யோகாசனம், இது  உடலை கீழே இருந்தும் மேலிருந்தும் உயர்த்தும்.

வயிற்றுத் தசைகள், கால் தசைகள் மற்றும் இடுப்பு நெகிழ்வுகளைப் பயன்படுத்துகிறது, மேலும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது. எனக்கு தெரிந்த  பிரபலங்கள் பலரும் இந்த யோகாசனத்தை பயிற்சி செய்கின்றனர்.

பியூட்டி:

தமிழ்  பாரம்பரியத்தில் வந்த  திருச்சியை சேர்ந்த ஒரு  கிராமத்து பெண் நான்.. ஸ்கூல்  முடிக்கும் வரை  கண்ணுக்கிடும் காஜல் தவிர  என்னுடைய  மேக்கப் வேறு எதுவும் கிடையாது.

ஆரோக்கியமான  உணவு எடுத்துக் கொண்டாலே  ஸ்கின்  ஆரோக்கியமாக இருக்கும் என்று  நம்புகிறேன்.

அதுபோன்று  தினசரி   உடலுக்குத்  தேவையான  அளவு  தண்ணீர்  அருந்துவதையும்  பழக்கமாக்கிக் கொண்டால்,  தோல்  வறண்டு  போகாமல்,  பளபளப்பாக காட்சியளிக்கும்.

மற்றபடி உண்மையான  அழகின் ரகசியம்  என்பது,  தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் பொறுமை இவைகள்தான்.

காலில்  ஹீல்ஸ் செருப்பு கூட போட்டு நடக்கும் பழக்கமில்லாத  எங்கள்  ஊரில் இருந்து பிறந்து வளர்ந்த நான்  இன்று  இந்திய  அழகியாக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்றால் அதற்கு  என்னுடைய  தன்னம்பிக்கை, விடாமுயற்சி,  பொறுமை தான் காரணம்.

நாம் காணும் கனவை எதற்காகவும் தொலைக்கக் கூடாது.  நம்முடைய  கனவு  நம்மை  பயமுறுத்திக் கொண்டே இருந்தால்,  நாம் அதை துரத்திக் கொண்டே  இருப்போம்.  எனவே, கனவு காண்பதை ஒரு போதும் நிறுத்திவிடாதீர்கள்.

 

மழைக்கால நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/01/04/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...