40+ ஆண்கள் ஹெல்த் கைடு!

Date:

Share post:

40+ ஆண்கள் ஹெல்த் கைடு!

40+ ஆண்கள்

40 வயதினிலே…

‘என்னாப்பா இது! 40 வயசுலயே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரா’, ‘40 வயசுலயே கல்லீரல் சிதைஞ்சுபோச்சா?’ என்ற உரையாடல்கள் இப்போதெல்லாம் சாதாரணம். மது, புகைப் பழக்கம் காரணமாக, கல்லீரல் சிதைவு, இதய நோய்கள், புற்றுநோய், ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம் என 40 வயது மரணங்களின் அதிகரிப்பு நம்மை நிலைகுலையச் செய்கின்றன. வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸ் 40 வயதுக்குப் பிறகுதான். இயற்கையிலேயே 40 வயதில் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். உடல் நலனில் அக்கறையோடு பக்குவமாக இருந்தால், நாற்பதிலும் நலம்தான்!

40+ஆண்கள்

உடல் அளவில், 15 வயதில் மது மற்றும் சிகரெட் பழக்கம் ஆரம்பித்தவர்களுக்கு, 40 வயதில்தான் அதன் வீரியம் புரியும். 20-25 வருடங்கள் தொடர்ந்து மது அருந்தியதன் விளைவு, கல்லீரல் சிதைவடைய ஆரம்பிக்கும். கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்புச் சக்தி பெருமளவு குறையும். தொப்பை வரும். நுரையீரல் செயல்திறன் குறையும். சிலருக்கு நுரையீரலிலும், தொண்டையிலும் புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பிக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய இரண்டு பழக்கமும் இருந்தால், உணவுக் குழாய் தொடங்கி, மலக்குடல், ஆசனவாய் வரை உள்ள உறுப்புகளில் எதில் வேண்டுமானாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

40 வயதினிலே…

மரபியல் காரணிகளுடன், தவறான உணவுப்பழக்கம் மற்றும் தவறான வாழ்வியல்முறையைப் பின்பற்றும்போது, சர்க்கரை நோய், உடல் பருமன் வந்துவிடும். சர்க்கரை நோயைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கும்.குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகி, வாழ்க்கையில் ஓர் இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் காலகட்டம். பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்திருப்பார்கள்.

இந்த சமயத்தில் பதின் பருவத்தைப் போலவே மிருகத்தனம் தலைதூக்கும். தனது செயல்களை எதிர்த்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஈகோ அதிகரிக்கும். யாராவது ஏதாவது  கேள்வி கேட்டுவிட்டால், கேள்வி கேட்ட நபர் மீது மிகுந்த கோபம் ஏற்படும். செக்ஸ் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், மனைவியுடனான தாம்பத்திய வாழ்க்கையில் ஈர்ப்பு குறையும். எனவேதான், 40 வயதைத் தாண்டிய சில ஆண்கள், மற்றொரு பெண்ணுடனான உறவு எனப் பாதை மாறுகின்றனர். இவை அனைத்தும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள்.

எளிய தீர்வுகள்!

வாழ்க்கை முறையை மாற்றுங்கள். தினசரி அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து, ஒரு சொம்பு தண்ணீர் பருகுங்கள். அல்லது ஒரு லிட்டர் நீர் பருகுங்கள். தினசரி ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள்.வீட்டுப்பக்கம் ஏதும் ஜிம் இருந்தால், உடனடியாக இணையுங்கள்.

தினசரி ஒரு மணி நேரம் ஜிம்மில் பாடுபடுவது உங்களின் ஆரோக்கியத்தை அரவணைக்கும். மூன்று வேளையும் தவறாமல் உண்ணுங்கள்.

எந்த வேலை உணவையும் தவற விடாதீர்கள். அசைவம்தான் பிடிக்கும் என்றோ சைவம்தான் பிடிக்கும் என்றோ பிடிவாதமாய் ஒன்றையே சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டாம்.

இரண்டையும் கலந்து சாப்பிடுங்கள். சமவிகித உணவே ஆரோக்கியமானது. நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவை இருக்க வேண்டியது அவசியம்.

எனவே, சைவம் அசைவம் இரண்டையும் சாப்பிடுங்கள். சோற்றை குறைவாக்கிவிட்டு காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.

ஆண்கள், 30 வயதுக்கு மேல் கொலஸ்ட்ரால், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும்.

கோதுமை பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/12/24/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...