ஆரோக்கியம் காக்கும் பாதாம் உணவுகள்!

Date:

Share post:

பாதாம் உணவுகள் ஆரோக்கியம் காக்கும்
பாதாம்

பாதாம்

பாதாமில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளுக்கு மட்டமில்லாமல், புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்கள் பாதாமில் உள்ளது. இப்படி பல நன்மைகளை தரக்கூடிய பாதாமில் பல சுவையான உணவுகளை வழங்கியுள்ளார் செஃப் மனீஷ் மெஹோத்திரா.

பாதாம் கேரட் அல்வா கிரம்பில்

தேவையானவை:

கேரட் – 1/2 கிலோ,
திக்கான பால் – 1/2 லிட்டர்,
சர்க்கரை – 1/2 கப்,
ஏலக்காய் பொடித்தது – 4,
நெய் – 2 மேசைக்கரண்டி தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பாதாம் – 1/4 கப்.

கிரம்பில் செய்ய தேவையானவை :

நறுக்கிய பாதாம் – 1/4 கப்,
மைதா – 3/4 கப்,
வெண்ணை (உப்பு சேர்க்கப்படாதது) – 1/4 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
அரைத்த பாதாம் – 1/2 கப்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் கேரட் இரண்டையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும். பால் முக்கால் பாகம் குறையும் வரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் ஏலக்காய் பொடி, நெய், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும், அதில் நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி தனியே வைக்கவும். கிரம்பில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசறவும். பார்க்கும் போது பிரட் கிரம்ஸ் துகள்கள் போல் இருக்க வேண்டும். இதை ஒரு டிரேயில் வைத்து 180 டிகிரியில் மைக்ரோ அவனில் பேக் செய்யவும். பொன்னிறமாக மாறிய பிறகு அதன் மேல் கேரட் அல்வாவினை வைத்து வறுத்த பாதாமினை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

பாதாம் சேமியா முசாபிர்

தேவையானவை :

தோல் நீக்கி நறுக்கிய பாதாம் – 1/2 கப்,
சேமியா – 2 கப்,
நெய் – 3 மேசைக்கரண்டி,
தண்ணீர்  – 1 கப்,
சர்க்கரை சிரப் – 1 கப்,
ஏலக்காய் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
கோய் – 1/4 கப்,
வறுத்த பாதாம் – 3 மேசைக்கரண்டி.

செய்முறை :

கடாயில் நெய்யை சேர்த்து அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அதில் சர்க்கரை சிரப்பினை சேர்க்கவும். பிறகு அதில் வறுத்த சேமியாவையும் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கிளறவும். பிறகு இதில் துறுவிய கோயாவையும் சேர்த்து கிளறவும். தண்ணீர் சுண்டியதும் வறுத்த பாதாமை சேர்த்து அலங்கரிக்கவும்.

பாதாம் பூந்தி லட்டு

தேவையானவை :

லட்டு மாவிற்கு :

கடலை மாவு – 1 1/2 கப்,
தண்ணீர் – 1 கப்,
ஏலக்காய் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
வறுத்த நறுக்கிய பாதாம் – 1/4 கப்,
உலர்ந்த கோஜி பெரி பழங்கள் – 3 மேசைக்கரண்டி,
நெய் – 3/4 மேசைக்கரண்டி,
எண்ணை – தேவையானவை

சர்க்கரை பாகிற்கு தேவையானவை :

சர்க்கரை – 1 1/2 கப்,
தண்ணீர் – 3/4 கப்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு காய்ச்சி தனியே வைக்கவும். ஒரு கடாயில் எண்ணை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, தண்ணீர், ஏலக்காய் பவுடர் சேர்த்து மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். சிறிது மாவினை எண்ணையில் பொரித்து பார்க்கவும். உருண்டையாக இல்லாமல் தட்டையாக வந்தால் மாவில் தண்ணீர் அதிகமாக இருப்பது என்று அர்த்தம்.

அந்த சமயத்தில் மேலும் சிறிது மாவு சேர்க்கலாம். அல்லது கூம்பு போல் பொரிந்தால், மாவு திக்காக இருக்கும், தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். முத்துக்கள் போல் வந்தால் தான் பூந்தி செய்ய சரியான பதம். சின்ன சின்ன ஓட்டையுள்ள ஜல்லி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தியினை எண்ணையில் பொரிக்கவும். பொரித்த பூந்தியினை சர்க்கரை பாகில் சேர்க்கவும். எல்லா பூந்தியினையும் பொரித்தவுடன் அதில் பாதாம் மற்றம் கோஜி பெரி பழங்களைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கையில் நெய் தடவி சின்ன சின்ன உருண்டையாக பிடிக்கவும்.

பாதாம் ஆப்பிள் சாட்


தேவையானவை :

வறுத்த பாதாம் – 60 கிராம்,
பச்சை ஆப்பில் (நறுக்கியது) – 1 மேசைக்கரண்டி,
சிகப்பு ஆப்பிள் – 1 மேசைக்கரண்டி (நறுக்கியது),
எலுமிச்சை சாறு – 1/2 பழம்,
கருப்பு உப்பு – இரண்டு சிட்டிகை,
புதினா – சிறிதளவு,
ஆலிவ் எண்ணை – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாக சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். அப்படியே சாப்பிடவும். மாலை நேர ஸ்னாக்சிற்கு சிறந்த உணவு.



பாதாம் தானிய பிரியாணி

தேவையானவை :

பார்லி – 1/2 கப்,
சிகப்பரிசி – 1/2 கப்,
தினை – 1/2 கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
பூண்டு நறுக்கியது – 1 டீஸ்பூன்,
இஞ்சி – 1 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்,
கேரட் நறுக்கியது – 1/2 கப்,
வெங்காயம் – 1/4 கப்,
பொடித்த மிளகு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கு ஏற்ப,
காய்கறி வேவைத்த தண்ணீர் அல்லது தண்ணீர் – 7 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – 1 1/2 டீஸ்பூன்,
ஸ்பிரிங் ஆனியன் – 1 1/2 டீஸ்பூன்,
பாதாம் – 1/4 கப்.

செய்முறை :

பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் சீரகம், பிரிஞ்சி இலை சேர்க்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பார்லி, சிகப்பரிசி, தினை, தண்ணீர் என அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பாதாமை சேர்த்து மைக்ரோஅவனில் வைத்து 40 நிமிடம் 180 டிகிரியில் வேகவைக்கவும். தானியங்கள் வெந்ததும் கொத்தமல்லி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உடனே பரிமாறவும்.

பாதாம் பக்கோடா

தேவையானவை :

முழு பாதாம் – 1 கப்,
கடலைமாவு – 2 மேசைக்கரண்டி,
ரவை – 1 மேசைக்கரண்டி,
எண்ணை – பொரிக்க,
சிகப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கல் உப்பு – சுவைக்கு ஏற்ப,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
கருவேப்பிலை – 2 டீஸ்பூன்,
தண்ணீர் – 2 மேசைக்கரண்டி,
இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது),
பச்சை மிளகாய் – 1/2 டீஸ்பூன் (நறுக்கியது).

செய்முறை :

பாதாமினை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசறவும். உடன் பாதாமினை சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணையை சேர்த்து பிசறிய பாதாமினை சேர்த்து பொரிக்கவும். சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் ரெடி.

 

மேலும்

செஸ் போட்டியாளர்களின் மனச்சோர்வை நீக்கிய யோகாசனம் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/18/%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%be/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...