முதியோருக்கான சத்துணவுகள்!

Date:

Share post:

முதியோருக்கான சத்துணவுகள்!

முதியோருக்கான சத்துணவுகள்!

முதியோருக்கான முதுமையை இரண்டாம் பால்யம் என்பார்கள். குழந்தையில் உடலும் மனமும் எப்படி இருக்குமோ முதுமையிலும் அப்படியாகிவிடும். நோய் எதிர்ப்புச் சக்தியும் ஆற்றலும் குறைவாக இருக்கும்.

மனதும் குழந்தை போலவே மாறிவிடுவதால், பிடிவாதம், அழுத்தமான குணங்கள் அதிகம் இருக்கும் இப்படியான சூழலில் முதியவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சத்தான உணவுகள் அவசியம்.


முதுமையில் உணவு!

51-வயதான ஒருவரின் சத்துணவுத் தேவைகள் 60, 70, 80 மற்றும் 90 வயதானவர்களின் தேவைகளைவிட மாறுபட்டுள்ளன. துரதிருஷ்டவசமான, போதிய தகவல் இல்லாத காரணத்தினால் வயதுப் பிரிவினரின் தேவை மற்றும் பரிந்துரை குறித்து மேலும் நம்மால் கூற முடியவில்லை.

ஆனால், ஒவ்வொரு வயதானவருக்கும் அவருக்கென பரிந்துரைக்கப்பட்ட சத்துணவு குறைவாகவே இருக்கும். முதியவர்களுக்கான சத்துணவு ஆய்வின்படி அவை வழங்கப்படவில்லை.

எலும்பு மற்றும் மூட்டு வலி, உட்கார முடியாத நிலை, ஏஞ்ஜினா உட்பட வியாதிகளும் கூடவே தோன்றுவதால்
முதியவர்களிடம் உடல் செயல்பாட்டு நிலையும் வெகுவாகக் குறைந்து விடுகிறது.

மனிதர்களிடத்தில் இவ்வகை மாற்றங்கள் வெவ்வேறு சமயங்களில் தோன்றுவதும் தெரியவந்துள்ளது. எனவே, கலோரித் தேவைகளை வயதை வைத்துக் கணக்கிட்டு விட முடியாது.

ஹெல்த்தி உணவுகள்

முதியவர்களை மூன்று பிரிவுகளாகப் பின்வருமாறு பிரிக்கலாம் – செயல்படும் முதியவர்கள், பலவீனமான முதியவர்கள் மற்றும் நீண்ட நாளாக நோய்வாய்ப் பட்டவர்கள்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட ஒரு சத்துணவுத் தேவை இருக்கின்றது.

இவர்கள் உண்டு வாழும் உணவுப் பழக்கத்தைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன: வயது, பாலினம், வாழும் நிலைமை, உளவியல் மற்றும் உடல் நலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் மற்றும் சமூகத்தாரின் ஆதரவு ஆகியவை.

செயல்படும்  முதியவர்கள்

சில சத்துணவு வகைகளைத் தவிர ஆரோக்கியமான இளைஞர்களின் தேவைகளுடன் ஒப்பிட்டால், செயல்படும் முதியவர்களின் சத்துணவுத் தேவையில் பெரும் மாற்றங்கள் ஏதும் ஏற்படாது.

பரிந்துரைக்கப் படுவதை விட இவர்களிடத்தில் கால்சியம், ஃபோலேட் மற்றும் துத்தநாகம் ஆகியவை குறைவாகவே காணப்படுகின்றன;

இதை பால் மற்றும் பாலின் உப பொருட்களிலிருந்து சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பச்சைக் காய்கறிகளிலும் பழங்களிலும் ஃபோலேட் அதிக அளவில் காணப்படுகிறது; சிவப்பு இறைச்சி, மீன் மற்றும் முழுத்தானியங்களில் துத்தநாகம் காணப்படுகிறது.

பலவீனமான முதியவர்கள்

பலவீனமான முதியோர்களின் சத்துணவுத் தேவைகள் மிகவும் மாறுபடலாம்; சத்துணவுக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயமும் இப்பிரிவினருக்கு அதிக அளவில் உண்டு.

பலவீனத்தின் சத்துணவுக் குறைபாட்டுக் காரணிகளாக பசியின்மை, குறைந்த அளவு உணவு உட்கொள்வது, தானாகவே எடை குறைவது மற்றும் சார்கோபேனியா (வயதாவதால் தசைகளின் எடை மற்றும் பலம் படிப்படியாகக் குறைதல்) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நோய்வாய்ப்பட்ட முதியவர்கள்

இதய நோய் மற்றும் உயர்-ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் அவதிப்படும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு அந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சிறப்பான சத்துணவுத் தேவைகளுக்கான அவசியம் இருக்கிறது.

நீண்ட கால இதய நோயால் அவதிப்படும் நோயாளிகள் அடர்த்தியான கொழுப்பை – சிவப்பு இறைச்சி, உணவுக்கொழுப்பு வகைகளான நெய், வெண்ணெய், க்ரீம், தேங்காய் எண்ணெய் – ஆகியவற்றைக் குறைக்கலாம். நார்ச்சத்து வகைகளை – முழுத்தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை – அதிகரிக்கலாம்.

ஹைப்பர்டென்ஷனைக் குறைப்பதற்கு எடையைக் குறைத்தல், உப்பின் அளவைக் குறைத்தல், கால்சியம் உள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினமும் உட்கொள்வதை அதிகரித்தல் ஆகியவை அவசியம்.

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

 

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...