சசிகலா புஷ்பாவிடம் சிலுமிஷம் அத்து மீறிய பாஜக நிர்வாகி

Date:

Share post:

சசிகலா புஷ்பாவிடம் சிலுமிஷம்… அத்து மீறிய பாஜக நிர்வாகி..?

சசிகலா புஷ்பா

அதிமுகவில் நீண்ட காலமாக அங்கம் வகித்து ராஜ்யசபா எம்பியாகவும், தூத்துக்குடி மேயராகவும் பதவி வகித்தவர் சசிகலா புஷ்பா (46). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் 2020 இல் பாஜகவில் இணைந்தார்.

ஏற்கனவே திருச்சி சிவாவை விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அடித்தும், சிவாவுடன் தனிமையில் இருந்ததான புகைப்படங்களாலும் சசிகலா புஷ்பா சர்ச்சையில் சிக்கினார்.

மேலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தநிலையில் அவரது வீட்டிலேயே பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியத்தியதாகவும் சசிகலா புஷ்பா மீது புகாரும் வந்தது.

இதற்கிடையே. பாஜக கட்சியில் அங்கம் வகிக்கும் சசிகலா புஷ்பா கட்சி விஷயங்களில் நேரிடையாக தோன்றவில்லை. நீண்ட நாட்களாக கட்சி கூட்டங்களில்கூட அவரை பார்க்க முடியாமல் இருந்தது. அவரை பற்றிய விவகாரங்கள் செய்திகளில் மட்டுமே வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், சசிகலா புஷ்பா சமீபத்தில் கட்சி நிகழ்வில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.

அதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான சசிகலா கலந்துகொண்டார். அப்போது பாஜக மாநில பொதுச்செயலாளரான பொன்.பாலகணபதி சசிகலா புஷ்பாவுக்கு அருகில் மிக நெருக்கமாக இருந்தார். இந்நிலையில் அவர் சசிகலாவின் கையை கிள்ளுவதும், தொடுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

அதை சசிகலா புஷ்பா தடுக்க முயற்சிக்கிறார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், கட்சியில் உள்ள பெண்களுக்கு இதுதான் நிலைமை என்றும் அடிக்கடி

பாஜகவில் பெண்கள் விவகாரத்தில் நிர்வாகிகள் சிக்குவது வாடிக்கையாவிட்டது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், கட்சி நிகழ்ச்சியில் பலபேர் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பதை கூட பொருட்படுத்தாமல் அந்த நபர் வெட்டவெளியில் இவ்வாரு செய்வது கட்சியில் உள்ள பெண்களுக்கு

எந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு டேக் செய்து கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...