பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

Date:

Share post:

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

லண்டன் :’பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் இன்று  காலமானதாக அரண்மணை வட்டாரம் அறிவித்தது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, உடல் நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். வயது மூப்பால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் ராணிக்கு ஏற்பட்டுள்ளன.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தகவலறிந்த ராணியின் மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கமீலா உள்ளிட்ட ராணியின் குடும்பத்தினர் பால்மோல் கோட்டைக்கு வந்தனர்.

இரண்டாம் எலிசபெத் வாழ்க்கை வரலாறு

1926-ம் ஆண்டு பிறந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டனின் ராணியாக அரசுப் பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.96 வயதாகும் இரண்டாம் எலிசபெத், பிரிட்டனில் நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்த சாதனையை, 2015ல் புரிந்தார். தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927 – 2016 வரை, 70 ஆண்டு, 126 நாட்கள் அரசராக இருந்தார்.

இந்த வீடியோவை குழந்தைகளுடன் பாருங்கள்

அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் முறியடித்து உலகிலேயே மிக நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்தோர் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரான்சின் பதினான்காம் லுாயிஸ், 1643 – 1715 வரை, 72 ஆண்டு, 110 நாட்கள் அரசராக இருந்து, சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பிரிட்டன் ராணி மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார்.

அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிரேறன்’ இவ்வாறு மோடி தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...