சிறுவாபுரி முருகன் கோயிலில் குடமுழுக்கு

Date:

Share post:

சிறுவாபுரி முருகன் கோயிலில் குடமுழுக்கு

தமிழக அமைச்சர்கள் மத்திய இணை அமைச்சர்,  பங்கேற்பு

பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும்

சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது.

பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தமிழக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு

தமிழக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்து சமய அறநிலையத் துறை

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு,

ரூ.1.10 கோடி மதிப்பில் ராஜகோபுரம், மூலவர், அம்பாள் சந்நிதிகளின் விமானங்கள், அண்ணாமலையார் மற்றும்

விநாயகர் சந்நிதி உள்ளிட்டவற்றை புதுப்பிக்கும் திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தன.

அப்பணிகள், சமீபத்தில் முடிவுக்கு வந்தன.

மஹா கும்பாபிஷேக விழா

இதையடுத்து, கடந்த 17-ம் தேதி அனுக்ஞை, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவையுடன், மஹா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

நேற்று காலை 9 மணி வரை, ஆறு கால யாக பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடர்ந்து, யாக சாலைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள், மேள தாளங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு,

மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாண உற்சவமும், அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

19 ஆண்டுகளுக்குப் பிறகு

19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன்,

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,

துரை.சந்திரசேகர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இந்து சமய அறநிலையத் துறை (வேலூர்) இணை ஆணையர் லட்சுமணன்,

உதவி ஆணையர் சித்ரா தேவி உள்ளிட்ட அதிகாரிகள், வெளியூர் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவுக்கு, திருவள்ளூர் எஸ்பி சீபாஸ் கல்யாண் மேற்பார்வையில், 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அன்னதானம்

அதுமட்டுமல்லாமல், கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர்.

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும்,

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.

இது போன்று மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...