வில்லனாக மிரட்டியும் அங்கீகாரமில்லாத நடிகர்கள்

Date:

Share post:

வில்லனாக மிரட்டியும் அங்கீகாரமில்லாத நடிகர்கள்

வில்லனாக மிரட்டியும் அங்கீகாரமில்லாத நடிகர்கள்

வில்லனாக மிரட்டியும் அங்கீகாரம் கிடைக்காத நடிகர்.. சினிமாவில் கொடி கட்டிப் பறந்தும் வாடகை வீடுதான்…

சினிமாக்காரர்கள் என்றாலே பெரிய பங்களா, ஆடம்பர வாழ்க்கை முறை என பரவலாக பேசப்படுகிறது.

ஆனால் நிஜத்தில் பெரிய நடிகர்கள் ஓரளவு வசதியாக இருந்தாலும் துணை கதாபாத்திரங்கள், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த பலர் வறுமையால் வாடி வருகின்றனர்.

சொல்லப்போனால் பறவை முனியம்மா, வடிவேல் பாலாஜி போன்றோர் மருத்துவ செலவுக்கு கூட வசதி இல்லாமல் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

மிரட்டிய பிரபல நடிகர்

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டிய பிரபல நடிகர் கடைசி வரை வாடகை வீட்டிலேயே இருந்து உயிரிழந்துள்ளார்.

மலையாள சினிமா மூலம் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் தான் அவருக்கு வரவேற்பு கிடைத்தது.

பாலா சிங்

நாசர் எழுதி, இயக்கி, நடித்த அவதாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலா சிங்.

இப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்ட அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை நாடி வந்தது.

இதை தொடர்ந்து இந்தியன், உல்லாசம் போன்ற பல படங்களில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பாலா சிங் வில்லனாக மிரட்டி இருந்தார்.

குறிப்பாக தனுஷின் புதுப்பேட்டை படத்தில் அன்புவாக கலக்கிக் இருந்தார்.

சூர்யாவுடன் மாசி, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே போன்ற படங்களில் பாலா சிங் நடித்துள்ளார்.

இவர் தனது 67வது வயதில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி 2019இல் உயிர் நீத்தார்.

பாலா சிங் இறப்பதற்கு முன்பு வரை படங்களில் நடித்து வந்தார்.

கடைசி வரை துணை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வாழ்க்கையை ஓட்டி விட்டார்.

சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் இவர் கடைசி வரை வாடகை வீட்டிலேயே இருந்துள்ளார்.

கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த இவருக்கே இந்த நிலைமை என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் செய்தியாக உள்ளது.

2019-ல் மரணமடைந்த திறமையான பிரபலங்கள்

வில்லனாக மிரட்டியும் அங்கீகாரமில்லாத நடிகர்கள்

தமிழ் சினிமாவில் தங்களது திறமையான நடிப்பு மற்றும் உழைப்பினை நம்பினால் மட்டுமே வெகு வருடங்களாக இந்த பாதையை கடந்து செல்ல முடியும்.

அந்த வகையில் தமிழ்சினிமா உடன் நெருக்கமாக பயணித்து கடந்த வருடம் உயிர்நீத்த நடிகர்கள், இயக்குனர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மகேந்திரன்

திரையுலகத்தின் பிரபலமானவர்களின் பட்டியலில் இருப்பவர் மகேந்திரன். இவர் திரைத்துறையில் நடிப்பு மற்றும் இயக்கத்தில் புகழ் பெற்றவர்.

இவர் நடித்த பிரபலமான படங்களில் நிமிர், பேட்ட, சீதக்காதி ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கிரேசி மோகன்

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கிரேசி மோகன் தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அவர் நடிப்பில் வெளிவந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ், அருணாச்சலம், காதலா காதலா ஆகியவை முக்கியமானவை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். உடல்நலக்குறைவால் காலமானார்.

பாலாசிங்

வில்லத்தனமான நடிப்பில் பெயர் பெற்றவர் என்றே கூறலாம். இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த என்ஜிகே மற்றும் மகாமுனி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இ

வர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜே.கே.ரித்தீஷ்

அரசியல் மற்றும் சினிமாவில் புகழ் பெற்று விளங்கியவர் என்றே கூறலாம்.

இவர் நடித்த திரைப்படங்கள் எல்கேஜி மற்றும் நாயகன் ஆகியவை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம்.

இவர் தனது கட்சி பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பினால் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி

தனது இயல்பான நகைச்சுவையால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கைதி.

முக்கியமாக வடிவேலுடன் இவர் சேர்ந்து நடித்துள்ள அனைத்து காமெடிகளுமே ரசிகர்களிடையே கைத்தட்டல்களை குவித்தது என்றே கூறலாம்.

ஒரு திறமையான நடிகனுக்கு ரசிகர்களின் கைதட்டலை பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோன்று திரைத்துறைக்கு திறமைமிக்க நடிகர்களை இழந்துள்ளோம் என்பது பெரும் துயரம் தான்.

தற்போது அறிமுக நடிகர்கள் தங்களது திறமையை மட்டும் நம்பி களத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமா, இந்திய அளவில் புகழ் பெற்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு திறமைமிக்க நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என்பதில் நமக்கு பெருமை தான்.

வில்லனாக மிரட்டியும் அங்கீகாரமில்லாத நடிகர்கள்

இது போன்று மேலும்  சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...