வீட்டுக்கு போனதுமே ஓபிஎஸ் உற்சாகம்

Date:

Share post:

வீட்டுக்கு போனதுமே ஓபிஎஸ் உற்சாகம்

ஆட்டம் ஆரம்பம்.. ‘வேலையை காட்டும் தீர்ப்பு’ வீட்டுக்கு போனதுமே ஓபிஎஸ்-க்கு செம நியூஸ்.. ஈபிஎஸ் ஷாக்!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை உற்சாகம் கொள்ளச் செய்துள்ள நிலையில்,

எடப்பாடி பழனிசாமி பக்கமிருந்து சிலர் ஓபிஎஸ் பக்கம் தாவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவருக்கு பிரமாண்ட வரவேற்பை அளித்தனர். இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓபிஎஸ்.

தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர்.

அடுத்தகட்ட ஆலோசனை

அதிமுக பொதுக்குழு செல்லாது, ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் என

சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாததாகியுள்ளது.

இந்த நிலையில், ஓபிஎஸ் ஈபிஎஸ் இருதரப்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கேவியட் மனு

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே

உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சொந்த ஊர் சென்ற ஓபிஎஸ்

ஈபிஎஸ்ஸால் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவர் 3 நாட்கள் தனது வீட்டில் இருந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

வழிநெடுக வரவேற்பு

சென்னையில் இருந்து மதுரை வந்து, மதுரையில் இருந்து காரில் பெரியகுளம் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு

அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெருமாள் கோவில் முதல் அவரது வீடு வரை வழிநெடுக சாலையின் இருபுறமும் பெண்கள் நின்று மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து, வீரவாள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை

பின்னர் வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்துடன், அவரது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ஐகோர்ட் தீர்ப்பு பற்றியும், தான் இணக்கமாகச் செயல்பட அழைப்பு விடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் கருத்து பற்றியும் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்துள்ளார்.

ஓபிஎஸ். தொடர்ந்து, பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அவரை சந்தித்துப் பேசினர்.

திண்டுக்கல் மாவட்ட புள்ளி

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டம் ஆரம்பம்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டபோது, ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெருவாரியான முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கம் தாவினர்.

இப்போது, பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து

ஓபிஎஸ் பக்கம் நிர்வாகிகள் தாவத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிஎஸ் அப்செட்

பொதுக்குழு வழக்கு ஏற்படுத்திய பாதிப்பால் இன்னும் பலரும் ஓபிஎஸ் பக்கம் தாவக்கூடும் எனக் கிடைத்திருக்கும் தகவலால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆகியுள்ளார்.

தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகளிடம், யாரையும் அணி மாறிச் செல்ல விடக் கூடாது, விரைவில் தீர்ப்பு நமக்குச் சாதகமாகத் திரும்பும் எனக் கூறி வருகிறாராம்.

வீட்டுக்கு போனதுமே ஓபிஎஸ் உற்சாகம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...