எடப்பாடி வீசிய 10 “சரவெடிகள்”

Date:

Share post:

எடப்பாடி வீசிய 10 “சரவெடிகள்”

எடப்பாடி வீசிய 10 “சரவெடிகள்”.. இன்று வசமாக வெடிக்கும்.. அதிமுக வழக்கில் சொன்னது என்ன? பின்னணி

எடப்பாடி வீசிய 10 "சரவெடிகள்"

அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. பொதுக்குழு நடந்தது செல்லுமா, செல்லதா என்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்துவிட்டன.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இரண்டு தரப்பிற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

இந்த வழக்கில் கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதங்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்!

எடப்பாடி வாதங்கள் இந்த பொதுக்குழு நடந்ததே சட்டப்படிதான் என்ற ரீதியில்தான் எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்தார்.

வாதம் 1 – அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. 2432 பேர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டனர்.

இவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதோடு இவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர்.

வாதம் 2 – ஜூலை 23ம் தேதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

அதனால் அந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன.

ஏனென்றால் இந்த பதவிகளுக்கு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்படவில்லை.

முக்கிய வாதம்

வாதம் 3 – அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனாலும்.. பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதி ஆகாது. ஏனென்றால் அதில் சட்ட திருத்தம் எதுவும் செய்யவில்லை.எனவே பொதுக்குழு செல்லும்.

வாதம் 4 – பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் இரண்டாவது பொதுக்குழு நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

பொதுக்குழு கமிட்டி

வாதம் 5 – 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் என்று கோரினர். இதனால் அவைத்தலைவர் பொதுக்குழு அறிவிப்பை வெளியிட்டார்.

வாதம் 6- ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே அறிவித்தோம். இது டிவியிலும் காட்டப்பட்டது. அதனால் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூற முடியாது.

ஏன் முக்கியம்

வாதம் 7 – மெஜாரிட்டி உறுப்பினர்கள் வைத்த இந்த கோரிக்கையால் பொதுக்குழு நடத்தப்பட்டது. அதிமுகவில் எல்லாம் ஜனநாயக முறைப்படி நடக்கும். கட்சியில் இக்கட்டான நேரத்தில் மெஜாரிட்டி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இப்படி செய்யலாம். வாதம் 8 – அதிமுகவில் இதற்கு முன்பே இப்படி தேர்வுகள் நடந்து உள்ளன. ஓ பன்னீர்செல்வத்திற்கு நிர்வாகிகள் ஆதரவு இல்லை.

ஆதரவு இல்லை

வாதம் 9 – பொதுக்குழுவை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்த அடிப்படையில்தான் நடத்தினோம். உச்ச நீதிமன்றம் எங்களுக்கு அனுமதி கொடுத்தது.

வாதம் 10 – பொதுக்குழுவிற்கு வந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமனதாக முடிவு எடுத்தனர். அதனால் இதை கோர்ட் மதிக்க வேண்டும். கட்சி அரசியலில் மெஜாரிட்டிதான் முக்கியம். ஓபிஎஸ்ஸுக்கு மெஜாரிட்டி இல்லை.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...