பருத்திவீரன் முதல் விருமன் வரை

Date:

Share post:

பருத்திவீரன் முதல் விருமன் வரை

கிராமத்து பாத்திரங்களில் முத்திரைப்பதிக்கும் கார்த்தி

பருத்திவீரன் முதல் விருமன் வரை கிராமத்து பாத்திரங்களில் முத்திரைப்பதிக்கும் கார்த்தியின் படங்கள் இங்கு உள்ளன.

இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் கார்த்தி, நாயகனாக பருத்திவீரன் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

நடிகர் கார்த்திக்கு கிராமிய படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று தருகிறது.

இந்த பட்டியலில் பருத்திவீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம் போன்ற கிராமிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் இதோ.

1. பருத்திவீரன்

பருத்திவீரன் 2007-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைபடத்தை இயக்குனர் அமீர் சுல்தான் இயக்க,

கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

2. கொம்பன்

கொம்பன் தமிழ் திரையுலகின் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகனாக

கார்த்தி மற்றும் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க எம் முத்தையா இப்படத்தை இயக்க ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

3. கடை குட்டி சிங்கம்

கடை குட்டி சிங்கம் பசங்க புகழ் இயக்குனர் பண்டிராஜ் இயக்கத்தில், கார்த்திக் சிவக்குமார், சயீசா சைகள், மேயாத மான் புகழ்

பிரியா பவானிஷங்கர், சத்யராஜ் மற்றும் பலரும் இணைந்து நடித்த அதிரடி, நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம்.

இத்திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மேன்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

4. கைதி

கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நரேன் நடிக்கும் அதிரடி திரைப்படம்.

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

5. விருமன்

விருமன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ் கிரண், பிரகாஷ் ராஜ் என

தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம்.

இப்படத்தினை தமிழ் சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான சூர்யா சிவகுமார் தனது ‘2D’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அதிரடி – த்ரில்லர் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.

விருமன் திரைப்படம் 2022, ஆகஸ்ட் 12ல் சுதந்திர தின ஸ்பெஷல் ரிலீஸ் படமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

கதைக்கரு

பிரகாஷ் ராஜ் – சரண்யா பொன்வண்ணனிற்கு பிறக்கும் கடைசி மகனான கார்த்தி சில காரணங்களால் தந்தையை வெறுத்து தன் தாய் மாமன் ராஜ் கிரானுடன் வாழ்ந்து வருகிறார்.

கிராமத்தில் ஒரு அதிகாரியாக பலரால் மதிக்கப்படும் பிரகாஷ் ராஜ், தன் மகன் கார்த்தியின் நடவடிக்கையால் நிலைகுலைகிறார்.

பிரகாஷ் ராஜ் – கார்த்தி இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை என்ன? எப்படி ஒன்று சேர்ந்தனர்? என்பதே படத்தின் கதைக்கரு.

விருமன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணியில் கொம்பன் திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் பிரமாண்ட ஹிட் படமாக புகழ் பெற்றது.

மீண்டும் 2022 ஆம் ஆண்டு விருமன் படத்தின் மூலம் இதே கூட்டணி அமைந்துள்ளது.

இப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய அதிதி ஷங்கர், தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் இளைய மகள் ஆவார்.

அதிதி ஷங்கர் விருமன் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பலரால் அறியப்பட்டுள்ளார்.

விருமன் படம் வெளியாவதற்கு முன்பே இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படம் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விருமன் திரைப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் ‘மதுரை வீரன்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் பட்டி தொட்டி என பல இடங்களில் பலரால் ரசனையில் பிரபலமாகியுள்ளது.

விருமன் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை சார்ந்து உள்ள கிராமங்களில் நடந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோன காலத்தில் நடந்து முடிந்துள்ளது.

கார்த்தி, ராஜ் கிரண், அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சூரி, இளவரசு, வடிவுக்கரசி, ஆர் கே சுரேஷ் என ஒரு திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் முத்தையாவின் முந்திய படங்களை போன்று இப்படத்திலும் நடிகர் ஆர் கே சுரேஷ் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணைய தளத்தில் பலரால் கொண்டாடப்பட்டு வைரல் ஆகியுள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள காஞ்ச பூவு மற்றும் மதுரை வீரன் திரைப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ட்ரெண்டிங் பாடலாக பிரபலமானது.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும், விருமன்.

இப்படத்திற்கு முன்பே இவர்கள் கூட்டணியில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளியானது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...