நக்சலைட் ஏரியா ஆந்திராவிலிருந்து கஞ்சா

Date:

Share post:

நக்சலைட் ஏரியா ஆந்திராவிலிருந்து கஞ்சா

நக்சலைட் ஏரியா ஆந்திராவிலிருந்து கஞ்சா

’நக்சலைட் ஏரியா’ ஆந்திராவிலிருந்து கஞ்சா..! ‘ஒருவரால்’ மட்டும் தடுக்க முடியாது -அமைச்சர் துரைமுருகன்

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக கஞ்சா வருகிறது, இதனை ஒருவரால் மட்டும் தடுக்க முடியாது எனவும் ஆகவே அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

விழிப்புணர்வு உறுதிமொழி

வேலூர் மாவட்டம்,வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடந்தது.

சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு போதை பொருட்களான கஞ்சா உள்ளிட்டவைகளுக்கு எதிரான உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

அமைச்சர் துரைமுருகன்

பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையி,” சாலையின் உள்ள போர்வெல்லுடன் கால்வாய் அமைத்தவர்கள் அதிமுக ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கு ஒப்பந்தத்தில் முன் அனுபவமில்லை . இதனை இந்த அரசாங்கம் ஆட்சியரிடம் சொல்லி மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி

இந்த ஒப்பந்தம் யார் எடுத்தார்கள் என அரசாங்கம் சட்டபடி நடவடிக்கை எடுக்கும். பொதுப்பணித்துறையில் தின கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்

14 மாதங்களில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார்.

அவர் ஊரை சுற்றி வரட்டும் பார்த்து கொள்ளலாம்.

கஞ்சா கடத்தல் போதை பொருளை ஒரு ஆளால் தடுக்க முடியாது.

இது ஆந்திராவிலிருந்து ஆயிரம் வழிகளில் வேலூர் மாவட்டம் வழியாகவும் தமிழகத்திற்குள் வருகிறது.

கிருஷ்ணகிரிலிருந்து -கும்மிடிப்பூண்டி வரையில் பல்வேறு வழிகளில் ஆந்திராவில் இருந்து வருகிறது.

இதனை தடுக்க அனைவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நச்சலைட்டுகள் ஆந்திராவில் வன பகுதிகளில் கஞ்சா செடி வளர்க்கின்றனர் அங்கு யாரும் செல்லமாட்டார்கள் அது நச்சலைட்டுகள் பகுதி.

ஆளுநருடன் ரஜினி பேசிய அரசியல் சொல்ல முடியாத அரசியல். ஆளுநர் நாங்கள் அனுப்பி மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது ஜனநாயக புறம்பானது.

ஆளுநர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும்.” என்றார்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 11 பேரை கைது செய்த போலீசார், சுமார் 18 கிலோ கஞ்சாவையும், 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு சென்ற போலீசார் அங்கு பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த கண்ணம்மா நாயுடு என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்க முயன்றதும் தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து கொடுங்கையூரில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த ஒரு திருநங்கை, 2 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான பொதுவான தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...