வேலுமணி கோரிக்கை டிஸ்மிஸ்-உயர்நீதிமன்றம்

Date:

Share post:

வேலுமணி கோரிக்கை டிஸ்மிஸ்-உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு:

கடும் நடவடிக்கை கூடாது என உத்தரவிட கோரிய எஸ்.பி.வேலுமணி கோரிக்கை டிஸ்மிஸ்- ஹைகோர்ட் டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்;

இவ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்ற

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தாக்கல்  செய்யப்பட்ட ரிட் மனுக்களை திரும்ப பெறுவதாகவும்,

வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சிக் கால டெண்டர்கள் முறைகேடுகள் தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி,அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர்கள் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது இந்த வழக்குகள் போடப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

மீண்டும் விசாரணை

இன்றைய விசாரணையின் போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை வாபஸ் பெறுகிறோம்;

வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில் மனு கொடுத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், தங்கள் தரப்பு மீதான விசாரணையின் போது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்

அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த  தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணை தொடரந்து நடைபெறலாம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது எனவும்,

வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு  உத்தரவிட்டுள்ளனர்.

இதன் பின்னர், இவ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரும் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அதேபோல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது; மேலும் இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யக் கூடாது என்றனர்.

மேலும் எஸ்.பி.வேலுமணி தரப்பின் மனுவுக்கு ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எஸ்.பி.வேலுமணி கோரிக்கை டிஸ்மிஸ்-உயர்நீதிமன்றம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான அரசியல் தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...