மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா நயன்தாரா?

Date:

Share post:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா நயன்தாரா?

உண்மையில் என்ன நடந்தது?

தமிழ், மலையாளம், இந்தி என 3 மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நயன்தாரா பற்றிய தகவல்கள் எதுவானாலும் சோஷியல் மீடியாவில் உடனடியாக டிரெண்டாகி விடுகிறது.

கிட்டதட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து ஜுன் 9 ம் தேதி தான் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அஜித்துடன் ஏகே 62 படத்தில் ஜோடியாக நடிக்க இவரிடம் பேசப்பட்டு வருகிறது.

விரைவில் நயன்தாரா டாக்குமென்ட்ரி திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் பற்றி அனைத்து தகவல்களும் வைரலாகி விடுகின்றன.

சமீபத்தில் அவர்களின் திருமண டாக்குமென்ட்ரியை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டே அதை வெளியிட உள்ளதாகவும் அறிவித்தது.

ப்ரொமோ வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

‘Nayanthara: Beyond The Fairytale’ என்ற டைட்டிலில் டாக்குமென்ட்ரியை வெளியிட உள்ளதாக ப்ரொமோ வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ் எந்த தேதியில் வெளியிட உள்ளது என அறிவிக்கவில்லை.

இதனால் தேதியை எப்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாரா மருத்துவமனையில் அனுமதியா

இந்த சமயத்தில் அதிர்ச்சி தரும் தகவலாக, நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.

அதுவும் தொடர் வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டதால், ஏதாவது குட் நியூஸ் உண்டா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

ஏன்…என்னாச்சு நயன்தாராவுக்கு?

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, கணவர் விக்னேஷ் சிவன் சமைத்து கொடுத்த உணவை சாப்பிட்டதால் தான் நயன்தாராவிற்கு வாந்தி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நயன்தாராவிற்கு சில மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அதே சமயம் நயன்தாரா தோல் இன்ஃபெக்ஷனுக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என மற்றொரு தகவலும் பரவியது.

உண்மையில் என்ன நடந்தது ?

ஆனால் நயன்தாரா தரப்பில் இது பற்றி விசாரித்த போது, அப்படி எதுவும் நடக்கவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பொய்யானது. நயன்தாராவிற்கு உடல்நல பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

அவர் ஏற்கனவே கமிட்டான டைரக்டர் அஹ்மத் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வருகிறார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா நயன்தாரா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான  சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...