பெரும் நெருக்கடியில் AK61

Date:

Share post:

பெரும் நெருக்கடியில் AK61

குறி வைத்து அடிப்பதால், அடக்கி வாசிக்கும் போனி கபூர், அஜித்

எச் வினோத், அஜித், போனிகபூர்

எச் வினோத், அஜித், போனிகபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் AK61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமே சூடு பிடிக்கத் தொடங்கியது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்தது.

வலிமை படம் போல் இழுக்காமல் இப்படத்தை சீக்கிரம் வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

ஏனென்றால் நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வலிமை படம் வெளியானது.

இதனால் அஜித் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் AK 61 குறுகிய கால தயாரிப்பு என்று சொன்னார்கள்.

இதனால் ஆகஸ்ட் இறுதிக்குள் படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று எச் வினோத் மற்றும் அஜித் ஆரம்பத்தில் படுஜோராக இறங்கி வேலை செய்தனர்.

ஆனால் தற்போது இந்த படம் கொஞ்சம் டல் அடித்துவிட்டது.

ஏற்கனவே இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை அஜித் மாற்ற சொன்னதாக தகவல் வெளியானது.

இதனால் அஜித் அந்த இடைவெளியில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் AK61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் பாக்கி இருக்கிறதாம்.

இப்போது சினிமாவில் உள்ள பெரும் புள்ளிகளின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஐடி ரைட் அடுத்தடுத்து நடந்து வந்தது.

இதனால் அடுத்ததாக போனி கபூரை குறி வைக்கலாம் என்று கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களாம்.

ஏனென்றால் போனி கபூரின் வலதுகரம் வரை ஐடி ரைட் வலைவீசி உள்ளனராம்.

இதனால் கலக்கமடைந்த போனிகபூர் AK61 படத்தில் சற்று யோசித்து செயல்படலாம் என திட்டமிட்டுள்ளனராம். இதற்கு அஜித்தும் ஒப்புக்கொண்டது போல் தெரிகிறது.

இதனால் AK61 படம் இன்னும் தாமதமாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

AK61

அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகின்றார்.

நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்களின் கூட்டணி இணைந்துள்ளது.

கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

இருப்பினும் வசூல் ரீதியாக வலிமை வெற்றிப்படமாக அமைந்தது. எனவே வலிமை படத்திற்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள்

AK61 படத்திற்கு வந்துவிட கூடாது என்ற முனைப்பில் அஜித் மற்றும் வினோத் வேலை செய்து வருகின்றனர்.

எனவே கதை மற்றும் திரைக்கதையில் வினோத் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.

அஜித்தும் தன் பங்கிற்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். ஒரு உண்மை சம்பவதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல மாதங்கள் ஆன பின்பும் AK61 படத்தைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால் அஜித் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். எனவே தற்போது அவர்களின் கவலையை போக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதி AK61 படத்தின் முதல் பார்வை வெளியாகவுள்ளதாம். இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

#AK61 #போனி கபூர் #ஆகஸ்ட் 13 முதல் பார்வை #மஞ்சு வாரியர்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான  சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...