புது அவதாரத்தில் பிரபுதேவா

Date:

Share post:

புது அவதாரத்தில் பிரபுதேவா

இதுவரை இல்லாத புது அவதாரத்தில் பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை. தேறுமா.? தேறாதா.? விமர்சனம்

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் தனது ரூட்டை மாற்றி எடுத்துள்ள ஆக்ஷன் திரில்லர் படம் தான் பொய்க்கால் குதிரை.

இமான் இசை அமைத்துள்ளார், பாலு ஒளிப்பதிவு, ப்ரீத்தி மோகன் எடிட்டிங்.

கதை–  விபத்தில் தனது ஒரு கால் மற்றும் மனைவியை இழக்கிறார் பிரபுதேவா. மகள் தான் அவரின் உலகம் என்றாகிறது.

வந்த இன்சூரன்ஸ் பணத்தில் மகள் சொல்ல தனக்கு செயற்கை கால் வாங்கி பொறுத்துகிறார்.

மகளுக்கு இருதய பிரச்சனை என தெரிய வர, அதனை சரி செய்ய 70 லட்சம் தேவை படுகிறது. ஜெயிலில் உள்ள பிரகாஷ்ராஜை சந்திக்கிறார்,

அவரோ வரலக்ஷ்மி சரத்குமார் மகளை கடத்த சொல்லி ஐடியா தருகிறார்.

முதலில் மறுத்த பிரபுதேவா பின்னர் ஜெகனுடன் கூட்டணி போடுகிறார், எனினும் அவருக்கு முன் வேறு யாரோ பெண்ணை கடத்துகின்றனர்.

இந்நிலையில் பிரபுதேவா சிக்குகிறார்.

நானே உங்கள் மகளை மீட்டு தருகிறேன் மாறாக எனது மகளின் மருத்துவ செலவுக்கு பணம் தாருங்கள் என கோரிக்கை வைக்கிறார் பிரபுதேவா.

பின்னர் இன்வெஸ்டிகேஷன், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என சென்று முடிகிறது இந்த படம்.

சினிமாபேட்டை அலசல்– நல்ல கதை மட்டுமன்றி திரைக்கதை அமைப்பும் சூப்பர் தான்.

முதல் பாதி சற்றே நம் பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதி சூப்பர். பாடல்கள் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.

சண்டைக்காட்சிகள் சூப்பர், எமோஷன் சீன்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

நாம் எளிதில் யூகிக்க கூடிய ட்விஸ்டுகள் தான் வருகிறது.

அடுத்த பாகம் எடுப்பதற்கு ஏற்றது போன்று பல விஷயங்களை வைத்துள்ளார் இயக்குனர்.

வெர்டிக்ட்– ஓடிடி தளத்திற்காக எடுக்கும் வெப் தொடருக்கு தேவையான அத்தனை சமாச்சாரமும் இப்படத்தில் உள்ளது.

திரைப்படம் என எடுத்ததை விட வெப் சீரிஸாக எடுத்திருக்கலாம் இந்த டீம் என்பதே நம் கருத்து

புது அவதாரத்தில் பிரபுதேவா

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...