4 இயக்குனர்கள் வெவ்வேறு கோணத்தில்

Date:

Share post:

4 இயக்குனர்கள் வெவ்வேறு கோணத்தில்

விக்டிம் விமர்சனம்.. பா ரஞ்சித் நீங்க வேற லெவல்

4 இயக்குனர்கள் வெவ்வேறு கோணத்தில்

விக்டிம் ஒரு தமிழ் ஆன்டாலஜி, இது சிம்பு தேவன், எம் ராஜேஷ், பா.ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு இயக்கிய நான்கு குறும்படங்களைக் கொண்ட ஒரு அதிரடி திரில்லர் நாடகத் திரைப்படமாகும்.

இந்தப் படத்தில் பிரசன்னா, அமலா பால், பிரியா பவானி சங்கர், நாசர், தம்பி ராமையா, நட்ராஜ் (நட்டி), கலையரசன், குரு சோமசுந்தரம், கிரிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு சாம் சி எஸ், பிரேம்கி, கணேஷ் சேகர் மற்றும் டென்மா இசையமைத்துள்ளனர்  படத்திற்கான ஒளிப்பதிவை ஆர்.சரவணன், சக்தி சரவணன் மற்றும் தமிழ் ஏ அழகன் ஆகியோர் கையாண்டுள்ளனர்.

லாரன்ஸ் கிஷோர், ஆகாஷ் தாமஸ், செல்வா ஆர்கே, வெங்கட் ராஜன் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

விக்டிம் திரைப்படம் ஆகஸ்ட் 5 முதல் சோனி எல்ஐவியில் மட்டுமே ஒளிபரப்பாகிறது.

ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகிய நான்கு இயக்குனர்களின் ஆந்தாலஜி தொகுப்பு தான் இந்த விக்டிம். சோனி ஓடிடி தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.

தமம் –

மண் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தான் இந்த ரஞ்சித்தின் படத்தில். புத்தர் சிலை, மீனை பிடிக்க துடிக்கும் சிறுமி என தான் சொல்ல வரும் அரசியிலுக்கு ஏற்ற அறிமுகத்தை கொடுக்கிறார்.

சிறிய நிலம் வைத்துள்ளவர்கள் படும் அவஸ்தை நம் கண் முன்னே வந்து போகிறது. உயிரை காப்பதை காட்டிலும் எடுக்க துடிக்கும் மக்கள் தான் இங்கு அதிகம்.

ஒளிப்பதிவு படத்திற்கு ஸ்பெஷல், குரு சோமசுந்தரம், கலையரசன், ஜானி என பழக்கப்பட்ட நடிகர்கள் தான்.

மொட்டை மாடி சித்தர்–

பாண்டஸி, காமெடி என தனக்கு பழக்கப்பட்ட கதை களத்தை எடுத்துள்ளார் சிம்புதேவன்.

நாசர் மற்றும் தம்பி ராமையா காம்போ இப்படத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.

இறுதியில் யார் ஏமாற்றப்பட்டார்கள், யார் ஏமாந்தவர் என கிளைமாக்சில் சொல்லி முடிப்பது சிம்புதேவனுக்கே உள்ள ஸ்பெஷல் டச்.

மிராஜ் – ராஜேஷின் படம் ஹாரர் ஜானர் போல ஆரம்பிக்கிறது.

பிரியா பவானி ஷங்கர் மற்றும் நட்ராஜ் இதில். சென்னையில் காட்டேஜில் ஒரு நாள் இரவு என்ன நடக்கிறது என்பதனை படமாகியுள்ளார்.

எனினும் சில நிமிடங்களில் இது ஹாரர் அல்ல எதோ சைக்கலாஜிக்கல் திரில்லர் தான் எடுக்க முயற்சித்துள்ளார் என்பது எளிதில் புரிந்து விடுகிறது நமக்கு.

கன்பஷன் –

வெங்கட் பிரபுவின் ஸ்டைலிஷ் மேக்கிங்; அமலா பால் மற்றும் பிரசன்னா தான் ப்ளஸ். இரட்டை வாழ்க்கை வாழ்வதை பற்றி பேசியுள்ளார் இயக்குனர்.

தனித்து இருக்கும் அமலாபால், அவளை கொலை செய்ய வருகிறார் பிரசன்னா. இந்த ஒன் லயன் கதையில் இரண்டு ட்விஸ்ட் வைத்து இயக்கியுள்ளார்.

மங்காத்தா விளையாட்டை போல இதுவும் சுவாரஸ்யம் தான்.

அலசல்–

அதீத சூப்பர் என்றோ அல்லது செம்ம மொக்கை என இப்படத்தை சொல்லிவிட முடியாது, தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

இயக்குநர்களின் கதைக்களம் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். இன்றைய தேதிக்கு ஓடிடி என்பது சாமானியனும் பார்க்கும் விதத்தில் எளிதாகி விட்டது,

எனவே இப்படம் ஓகே தான். முதல் மற்றும் கடைசி படம் கட்டாயம் அனைவரின் பாராட்டையும் பெரும்.

4 இயக்குனர்கள் வெவ்வேறு கோணத்தில்

#அலசல் #மொட்டை மாடி சித்தர் #கன்பஷன் #தமம் #விக்டிம் விமர்சனம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...