ஒயிட்போர்ட் பேருந்துகள் நிறம் மாறுகிறது

Date:

Share post:

ஒயிட்போர்ட் பேருந்துகள் நிறம் மாறுகிறது

ஒயிட்போர்ட் பேருந்துகள் நிறம் மாறுகிறது: பிங்க் கலரில் ஜொலிக்கும் புகைப்படங்கள்!

ஒயிட்போர்ட் பேருந்துகள் நிறம் மாறுகிறது

குறைந்த கட்டணங்களில் பயணம் செய்யும் வகையில் உள்ள ஒயிட்போர்ட் பேருந்துகள் இனி நிறம் மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பெண்களுக்கு இலவசமாகவும் ஆண்களுக்கு குறைந்த கட்டணங்களில் பயணம் செய்யும் ஒயிட்போர்ட் பேருந்துகள் இப்போது பிங்க் நிற  பேருந்துகள் என மாற போகின்றன.
 இந்த நிலையில் ஒயிட்போர்ட் பேருந்துகளுக்கு பிங்க் கலரில் வண்ணம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பேருந்துகள் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த பேருந்துகளுக்கு பிங்க் கலரில் வண்ணம் அடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் உள்ள 60 ஒயிட்போர்ட் பேருந்துகளுக்கு பின்க் கலர் வண்ணம் பூசப்பட்டுள்ளது என்றும், இந்த பேருந்துகளின் இயக்கத்தை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழக (MTC) பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2021ல் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டது.
இதன்மூலம் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த ஆண்டு 40 சதவீதமாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கடந்த ஓராண்டில் 132 கோடிக்கும் அதிகமானோர் இலவச பயணத் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் வகையில் 1,600 கோடி ரூபாய் அளவிற்கு மானியமாக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இலவச பயணத் திட்டத்தால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மாதந்தோறும் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.
இது அவர்களின் குடும்ப செலவுகளும் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது என்றார்.
ஆனால் இந்த திட்டம் சாதாரண பேருந்துகளில் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அறியாமல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி பெண்கள் ஏமாற்றம் அடையும் சூழல் நிலவுகிறது.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கக் கூடிய பேருந்துகளை பிங்க் நிறத்தில் மாற்ற சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் அடுத்த வாரம் முதல் பிங்க் நிற பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து வழித்தடங்களிலும் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் இயக்கப்படும் 3,300 பேருந்துகளில் கிட்டதட்ட பாதி பேருந்துகள் சாதாரண பேருந்துகள் என்பது கவனிக்கத்தக்கது.
#பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகள் #திமுக அரசு #பெண்கள் பயனடைந்து வருகின்றனர் #பெண்களை மகிழ்வூட்டும் வகையில் பிங்க் நிறத்தில் பேருந்துகள் #சென்னையில் லேடீஸ் ஸ்பெஷல் பேருந்துகள் #திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்

 

ஒயிட்போர்ட் பேருந்துகள் நிறம் மாறுகிறது

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான பொது தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...