வெளிவராமல் போன பிரமாண்டமான படங்கள்

Date:

Share post:

வெளிவராமல் போன பிரமாண்டமான படங்கள்

வணக்கம் சிந்திங்க9நியூஸ் வாசகர்களே! தொடர்ந்து நமது வலைத்தளத்தில் பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம்.

அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் விமரிசையாக ஆரம்பித்து பின்னர் வெளிவராமல் போன சில பிரமாண்டமான திரைப்படங்களை இங்கு காணலாம்.

மருதநாயகம்:

வெளிவராமல் போன பிரமாண்டமான படங்கள்

கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம், மிகவும் ஆர்ப்பாட்டமாக ஆரமிக்கப்பட்டது. படத்தின் பூஜையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, இந்தியா வந்திருந்த எலிசபெத் ராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மருதநாயகமாக பிறந்து, முகம்மது யூசுப் கானாக மாறிய வீரரின் வரலாறை சொல்வதாக படம் அறிவிக்கப்பட்டது.

30 நிமிட காட்சிக்கே பல கோடி ருபாய் கரைந்து போனது. அதனால் படம் இன்று வரை வெளியே வரவே இல்லை.

நிச்சயம் தமிழர்களின் பெருமை மிகு படமாக வந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

துருவ நட்சத்திரம்:

வெளிவராமல் போன பிரமாண்டமான படங்கள்

கவுதம் மேனன் இயக்கத்தில் முதலில் சூர்யாவை வைத்து இயக்குவதாக இந்த படம் உருவாக இருந்தது.

பின்னர், சூர்யாவுடன் ஏற்பட்ட முறிவுக்கு பின்னர் விக்ரம் உள்ளே வந்தார். படமும் விறுவிறுவென்று வளர்ந்தது.

விக்ரமுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடித்தார். தீவிரவாதிகளை கையாளும் இந்திய ஏஜெண்டாக வரும் இந்த படத்தின் டீசர் வரவேற்பு பெற்றது.

இருந்தாலும் கவுதம் தயாரிக்க படங்கள் ஊத்திக்கொள்ள, படம் அப்படியே நிற்கிறது.

காதல் சாதி:

கஸ்தூரி ராஜா இயக்கத்தில், இளையரஜா இசையில் விமரிசையாக ஆரமிக்கப்பட்ட திரைப்படம் காதல் சாதி.

பிரகாஷ்ராஜ் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் பாடல்கள் அப்போது வரவேற்பு பெற்றது.

சென்னை முழுவதும் அந்த படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. என்ன காரனோமே தெரியவில்லை. படம் இதுவரை வெளியே வரவே இல்லை.

நரகாசுரன்:

நரகாசுரன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில், துருவங்கள் 16 படத்தின் வெற்றிக்கு பின் வந்திருக்க வேண்டிய இந்த திரைப்படம் இதுவரை வெளியே வரவே இல்லை.

இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஷரியா சரண் உட்பட பலர் நடித்திருந்தனர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளிவந்திருக்கவேண்டிய இந்த படம், தயாரிப்பாளர், இயக்குனர் இடையே ஏற்பட்ட மோதலால் இன்னும் வெளியாகமல் கிடக்கிறது.

இந்த படைத்தல் முதலில் தயாரித்தவர் கவுதம் மேனன் என்பது கூடுதல் தகவல்.

சபாஷ் நாயுடு:

சபாஷ் நாயுடு

கமல்ஹாசன் நடிப்பில் தசாவதாரம் படத்தில் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரமான சபாஷ் நாயுடுவை வைத்து தனியாக ஒரு நகைச்சுவை படம் எடுக்க முயன்றார் கமல்.

இதில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து கமலுக்கு காலில் அடிபட்டது, எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதன் பின்னர் மற்ற படங்களில் பிஸியானதால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது.

மதகஜராஜா:

மதகஜராஜா

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலக்ஷ்மி, அஞ்சலி மற்றும் பலர் நடிததிருந்த படம் மதகஜராஜா.

இந்த படம் தயாரிப்பாளரின் பிரச்சினை காரணமாக பல முறை வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டு பின்வாங்கியது.

விஷாலும் தனிப்பட்ட முறையில் இந்த படத்தை வாங்கி வெளியிட நினைத்தார். ஆனாலும் அந்த முயற்சி கைகூடவில்லை.

இந்த படத்திற்கு அந்நேரம் நல்ல வரவேற்பு இருந்தும் வெளிவர வில்லை.

ரெண்டாவது படம்:

ரெண்டாவது படம்

தமிழ் படம் என்ற முதல் படம் மூலமாக கவனம் ஈர்த்தார் சி.எஸ்.அமுதன். அந்த படம் தமிழ் படங்கள் பலவற்றை கேலி செய்து வெற்றி பெற்றது.

அதனால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விமல், ஆகாஷ் அரவிந்த், ரிச்சர்ட் ஆகியோரை வைத்து இயக்கப்பட்ட இந்த படம் வெளிவராமல் போனது.

வெளிவராமல் போன பிரமாண்டமான படங்கள்

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...