மாப்பிள்ளை வி.சபரீசன் அவர்களின் பிறந்தநாள்

Date:

Share post:

மாப்பிள்ளை வி.சபரீசன் அவர்களின் பிறந்தநாள்

வி.சபரீசன்: தமிழ்நாட்டின் முதல் குடும்பத்தின் முதன்மை மருமகன்

40 வயதாகும் சபரீசன், திருநெல்வேலியைச் சேர்ந்த அரசியல் சார்பற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் திருமதி.செந்தாமரைக்கும் காதல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திரு.சபரீசனின் தொடர்புத் திறன், கட்சியில் உள்ள அனைவருடனும், கூட்டணி மற்றும் போட்டியாளர்களுடனும் நல்லுறவு, பின்னணியில் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவையே திரு.சபரீசனின் பலம் என்று முதல்வரின் உள் வட்டாரம் தெரிவிக்கிறது.

திரு.சபரீசன் அனைவருடனும் இணக்கமான உறவையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நட்புறவையும் கொண்டுள்ளார்.

“அவர் அதிகாரத்தில் உள்ள பலரைப் போலல்லாமல், அவர் ஒருபோதும் பகைமையைப் பின்தொடர்வதில்லை, அல்லது போட்டியாளர்களை குறிவைப்பதில்லை” என்று கூறினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

“முதல்வரைப் பற்றிய புதிய யோசனைகள் மற்றும் சினிமா வீடியோக்களை திரு.சபரீசன் முன்வைத்தபோது, ​​நீங்கள் திரைப்படம் எடுக்கிறீர்களா என்று பலர் அவரிடம் கேட்டனர்.

தி.மு.க.வின் ‘ஸ்டாலின் தான் வர்ராரு விடியல் தர போறாறு’ என்ற பாடல் இந்த தேர்தலில் மிகவும் பிரபலமானது. “அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது” என்று தமிழக முதல்வர் திமுக தலைவர் ஒருமுறை கூறினார்.

திரு.சபரீசன், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் எத்தனை, அவற்றின் தரம் என்ன? என்னென்ன கல்வித் திட்டங்கள் உள்ளன? புதிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? உலகில் உள்ள தலைசிறந்த பள்ளிக்கூடங்கள் எப்படி நடக்கின்றன? என்பதை எல்லாம் புள்ளிவிபரமாக, ஆதாரங்களுடன்,

அக்குவேர்… ஆணிவேராகப் பிரித்து ஒரு புரொஜெக்டைத் தயார் செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார்.

அதில் அசந்துபோன முதல்வர் மு.க.ஸ்டாலின், ”இத்தனை தகவல்கள் எப்படி உங்களுக்குக் கிடைத்தது? அதிகாரிகள் யாராவது உதவினார்களா?” என்று கேட்டபோது, கூலாக சிரித்துக் கொண்டே பதில் சொன்ன திரு.சபரீசன்

“என்னிடம் தனியாக இதற்கு ஒரு டேட்டா டீம்” இருக்கிறது எனச் சொன்னபோது, ஸ்டாலின் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனார்.

ஈகோ பார்க்காதவர்

ஈகோ பார்க்காதவர் திரு.சபரீசன். கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்ட இருந்த நேரத்தில் முரசொலி பவள விழா நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமாகப் போய் அந்த அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும்.

கட்சியின் சீனியர்களிடம் கொடுத்து, அந்த வேலையைச் செய்ய முடியாது. அவர்கள் வருத்தப்படுவார்கள்.  அதுபோல, முக்கியத்துவம் குறைந்தவர்களை அனுப்பியும் பத்திரிகை முதலாளிகள், ஆசியர்களை சந்திக்க வைக்க முடியாது?

அகில இந்தியத் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கும் வேலை, விழா ஒருங்கிணைப்பு, விழா மலர் தயாரிப்பு என தளபதி மு.க.ஸ்டாலினும் அந்த நேரத்தில் ஓவர் பிஸி.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், எந்த ஈகோவும் பார்க்காமல், “அழைப்பிதழ் கொடுக்கும் வேலையை நான் செய்கிறேன் என்று இறங்கி வந்தவர் திரு.சபரீசன்”.

சொன்னதுபோல், அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் சென்று அவரே முரசொலி பவள விழா அழைப்பிதழைக் கொடுத்தார்.

மாப்பிள்ளை வி.சபரீசன் அவர்களின் பிறந்தநாள்

இப்படி பண்புடன் சூழ்நிலைக்கேற்ப செயல்படும் தன்மை திரு.சபரீசனின் மதிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உயர்த்தியது.

அதோடு 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க-வின் டேட்டா அனலைசராக இருந்த சபரீசன், தி.மு.க-வின் ஆன்லைன் விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்தார்.

இத்தனை பன்முகத்தன்மை கொண்ட தமிழகத்தின் மாப்பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவர் மென்மேலும் கட்சி தொண்டாற்றிட அவரை வாழ்த்துகிறோம்.

இவன்,
சிந்திங்க9நியூஸ்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...