மிதுன ராசியின் குணநலன்கள்

Date:

Share post:

மிதுன ராசியின் குணநலன்கள்

பொது:

மிதுன ராசிக்காரர்களிடம் எல்லாமே இருக்கும். தோற்றம், புதுமை, ஸ்டைல் என்று மற்றவர்கள் இவர்கள் இருக்கும் திசையை ஒரு முறை பார்த்தாலே அவர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறனுடையவர்கள் மிதுன ராசிக்காரர்கள்.

மனிதர்களை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இவர்களுக்கு உண்டு. ஆனால் அவர்களுடைய இந்த திறனைப் பற்றி அவர்கள் ஒருபோதும் சட்டை செய்ய மாட்டார்கள்.

ஒரு கூட்டத்தில் தாங்கள் தான் மிகவும் கவர்ச்சிகரமான நபர் என்பதை மிதுன ராசிக்காரர்கள் அறிந்தே இருப்பார்கள்.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் இதுபோன்ற விஷயங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை.

ராசி அதிபதி

மிதுன ராசியின் குணநலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், ‘வித்யாகாரகன்’ எனப்படும் புதன் கிரகம்தான்’

”ஒருவர் புத்திசாலியாக இருக்கவேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் கண்டிப்பாகப் புதன் வலுப்பெற்று இருக்கவேண்டும்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணிக்க வரும் பெற்றோர், முதலில் கேட்கும் கேள்வி என் குழந்தை என்ன படிப்பு படிப்பான் என்பதுதான்.

அந்தப் படிப்புக்குக் காரணமானவர் புதன்.

இந்தப் பூமிப்பந்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டறியப் போகும் அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் புதன்தான். நவீன விஞ்ஞானிகளை உருவாக்குபவரும் இவர்தான்.

மிதுன லக்னத்துக்கு புதன் லக்னாதிபதி எனும் நிலை பெற்று சகல பாக்கியங்களையும் தரும் அமைப்பைப் பெறுகிறார்.

மிதுனத்தில் ஆட்சி பெற்றோ, கன்னியில் உச்சம் பெற்றோ, துலாம், கும்பம் போன்ற இடங்களில் நட்புடன் திரிகோண வலுப்பெற்றோ இருக்கும் நிலையில் ஜாதகருக்கு அனைத்து இன்பங்களையும் அள்ளித் தருவார்.

மீனத்தில் முறையான நீசபங்கம் பெற்றிருந்தால் முற்பகுதி வாழ்வை ஒன்றுமில்லாததாக்கி, பிற்பகுதியில் வாழ்வில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்வார்.

ராசி தனிச்சிறப்புகள்

பிறவியிலேயே சாகசங்களை விரும்பும் இவர்கள் பொழுதுபோக்காக நிறைய சாகசங்களைச் செய்வார்கள்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பல இடங்களில் தங்கள் சாகசத்தை காட்டி விடுவார்கள்.

திறமையான வாழ்க்கைத் துணைவரைத் தேடுவதாக இருந்தால் மிதுன ராசிக்காரர்கள் மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால், முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஏனென்றால் மிதுன ராசிக்காரர்களின் மனதில் இடம் பிடிப்பதென்பது காற்றில் பறக்கும் பறவையை கைப்பற்ற முயல்வதைப் போன்றதாகும்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அளவுக்கதிகமான கட்டுக்கடங்காத அன்பால் அழகாக நிறைப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்களை காதலிக்கும்போது மற்ற யாரிடமும் கிடைக்காத புதுமையான அனுபவம் கிடைக்கும்.

இளமை நிறைந்தவர்கள்:

மிதுன ராசிக்காரர்கள் இளமையான கவர்ச்சியான ஒரு ஜொலி ஜொலிப்பை தங்களது வாழ்நாள் முழுவதும் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு எப்பொழுதும் உண்மையான வயதை விட 10 வருடங்கள் குறைவான இளமையான தோற்றம் இருக்கும்.

நல்ல இளமையான உடற்கட்டால் ஆசீர்வதிக்கப்பட்ட இவர்கள், எப்பொழுதும் சுறுசுறுப்பான தேவதைகளாக வலம் வருவர்.

தலை முதல் பாதம் வரை திகைப்பூட்டும் தோற்றம் கொண்ட இவர்கள் எங்கே சென்றாலும் அவர்களை அறியாமலேயே ஒரு கவன ஈர்ப்பு மையமாக திகழ்வார்கள். இருந்தாலும் கூட அவர்களுடைய தோற்றத்தைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அதற்காக தாங்கள் அழகாக இருப்பது அவர்களுக்கு தெரியாது என்று அர்த்தமல்ல.

வேடிக்கையானவர்கள்:

மற்ற ராசிக்காரர்களும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் தான் எனினும் மிதுன ராசிக்காரர்கள் கலப்படமில்லாத நகைச்சுவை கொண்டவர்கள். மனதை லேசாக்கும் வகையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நகைச்சுவைகளைச் சொல்லி முழுமையாக மகிழ்விப்பவது இவர்களுடைய சிறந்த அம்சமாகும்.

மிதுன ராசி ஆன்மாக்கள் கவலையற்றவர்கள். அவர்கள் அவ்வளவு எளிதில் ஏமாற்றத்தால் மனம் சோர்ந்துவிடுவதில்லை. மிதுன ராசிக்காரர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்தால் எவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் உங்களை வாழ்நாள் முழுவதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

புத்திகூர்மை மிக்கவர்கள்:

மிதுன ராசிக்காரர்கள் அவர்கள் பார்க்கும் எல்லாவற்றிலும் ஆர்வத்தைத் தூண்டும் பகுத்தறியும் ஒரு நுண்ணறிவைக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் மூளை எல்லாவற்றையும் கிரகிக்கக் கூடியது.

எனவே அவர்கள் கற்றுக்கொள்ளும் எல்லாவற்றையும் அவர்களுடைய வளமான உரையாடலில் கொட்டுகின்றனர்.

மிதுன ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் ஒரு இரவு முழுவதும் எதை பற்றி வேண்டுமானாலும் அவர்களிடம் நீங்கள் பேசலாம். உரையாடலின் ஒவ்வொரு பகுதியையும் அவர்கள் ரசிப்பார்கள்.

மிதுன ராசியின் குணநலன்கள்

மிதுனத்தின் தகவமைப்பு:

மிதுன ராசியின் குணநலன்கள்

புதிய சூழலுக்குத் தகுந்தவாறு விரைவாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றனர். மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுது கிடைக்கும் எல்லா கண்ணோட்டங்களிலும் விஷயங்களை பார்க்க முயற்சி செய்வார்கள்.

இந்த பண்பு அவர்களுக்கு சூழ்நிலைக்குத் தக்கவாறு விரைவாக தகவமைத்துக் கொள்ள உதவுவதோடு எந்த இடத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் எப்போது உறுதியாக இருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.

இவர்கள் பேச்சுவார்த்தையில் வல்லவர்கள், இதனால் பல்வேறு சமூகக் குழுக்களில் விரைவாக பொருந்திக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாவற்றையும் மிக எளிதாக எடுத்துக் கொள்வார்கள்.

ஒழுக்கமானவர்கள்:

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஏனென்றால் அவர்களால் முடிந்தவரை வாழ்க்கையை எளிதாக கையாளுவார்கள்.

குடும்பத்தை பராமரிப்பது அல்லது வியாபார நிதிகளை கையாளுவது போன்ற பொறுப்புகளில் அவர்கள் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

வீட்டில் மிகச்சிறியதாக எதையாவது வாங்கினால் கூட அதற்கான செலவு பயன்பாடு போன்றவற்றை கவனமாக கண்காணிக்க உதவுவார்கள்.

மிதுன ராசிக்காரர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள், எனவே அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு தேவையான அளவுக்கு வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சுதந்திரத்தை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.

விசுவாசமானவர்கள்:

மிதுன ராசிக்காரர்கள் எல்லோரும் எளிதில் அணுக முடியாத நபர்கள் என்று பலருக்கும் தோன்றலாம்.

ஆனால் ஒருமுறை மிதுன ராசிக்காரர்களின் நெஞ்சில் இடம் பிடித்துவிட்டால் இறுதிவரை அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.

அவர்களை மரியாதையுடன் நடத்தும் ஒருவரை கண்டறிந்துவிட்டால் மற்றவர்கள் மீது ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு இவர்களுடன் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி பழகுவார்கள்.

மிதுன ராசிக்காரர்களின் காதல் அளவுக்கதிகமாக இருக்கும் ஆனால் உங்களை அடிமைப்படுத்தும், ஒவ்வொரு நாளும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று நீங்கள் கேட்கும் அளவிற்கு மாற்றி விடுவார்கள்.

உண்மையானவர்கள்:

மிதுன ராசியின் குணநலன்கள்

மிதுனராசிக்காரர்களுக்கு போலித்தனம் என்றால் என்னவென்றே தெரியாது. அப்பழுக்கற்ற நம்பகத்தன்மையை தவிர வேறு எந்த குற்றத்தையும் செய்ய அவர்களுக்கு தெரியாது.

இவர்களுக்கு உங்கள் மேல் காதல் இல்லை என்றால் உங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அதேசமயம் அவர்கள் விரும்பத்தக்கவராக நீங்கள் இருந்தால், நேரடியாக வந்து காதலை சொல்ல எவ்விதமான தயக்கமான மனநிலையும் அவர்களுக்கு கிடையாது.

எதைச் செய்தாலும் போலித்தனம் இல்லாத உண்மையான அடிமன ஆழத்திலிருந்து செய்வார்கள். எனவே அவர்களுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கங்கள் இருக்குமா என்று நீங்கள் யோசிக்க தேவையில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்றாக நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதையே பெறுவீர்கள்.

மிதுன ராசிக்காரர்களை விரும்பி துரத்தி காதலிப்பது அவர்கள் உங்களை என்றென்றும் விரும்புவதற்கு போதுமான காரணமாகும்.

ஒருமுறை அவர்கள் திரும்பி உங்கள் மீது காதலை செலுத்திவிட்டால் உங்களுக்கு வாழ்க்கையில் அதைவிட இனிப்பான ஒரு உணர்வு கிடையாது.

மீதி இருக்கும் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இப்படிப்பட்ட முரட்டு மனிதரின் மென்மையான பக்கத்தைத் திறந்து எப்படி காதலிக்க பழக்கினோம் என்று உங்கள் அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்து கொண்டே இருப்பீர்கள்.

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம், புனர்பூசம் நட்சத்திரம் மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரம் கொண்டது.

அதிர்ஷ்ட எண், நாள் மற்றும் நிறம்

எண்:

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பார்வை இருப்பதால் இவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்ட தினமாகும். வியாழக்கிழமையும் உகந்ததே. திங்கட்கிழமை மட்டும் அசுபம்

நாள்:

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பார்வை இருப்பதால் இவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்ட தினமாகும். வியாழக்கிழமையும் உகந்ததே. திங்கட்கிழமை மட்டும் அசுபம்

நிறம்:

மஞ்சள் இவர்களுக்கு அதிர்ஷ்ட நிறமாகும். எப்போதும் மஞ்சள் நிறத்திலான ஏதாவது ஒரு பொருளை உடன் வைத்திருப்பது நலம்.

இவர்களுக்கு மரகத கல் அதிர்ஷ்டமாகும். இதனை வெள்ளி மோதிரத்தில் பதித்து புதன்கிழமையன்று அணிய வேண்டும்.

அதிக கஷ்டம் ஏற்படின் செவ்வாய்கிழமை விரதம் இருக்கலாம்.

மிதுன ராசியின் குணநலன்கள்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...