தினம் ஒரு திருக்கோயில்-திருச்செந்தூர்

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோயில்

தினம் ஒரு திருக்கோயில்-திருச்செந்தூர்

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன.

அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை உள்ளன

இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலைப்பகுதியிலும், திருச்செந்தூர் கோயில் மட்டும் கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பானது.

படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு.

அதன் படி சூரபத்திரனை வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படைவீரர்கள் தங்கியிருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

சூரபத்திரன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்த சஷ்டி விழா, “சூர சம்ஹாரம்” என விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பெயர் காரணம்:

சூரபத்திரனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் ‘செயந்திநாதர்’ என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி ‘செந்தில்நாதர்’ என்று மருவியதாம்.

அதுபோலவே இவ்வூரும் ‘திருசெயந்திபுரம்’ என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாக சொல்லப்படுகிறது.

சிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. இவ்விடம் முன்னர் ‘திருச்சீரலைவாய்’ என்றலைக்கப்பட்டதாம்.

கோயில் அமைப்பு:

தினம் ஒரு திருக்கோயில்-திருச்செந்தூர்

முன்னுரையில் சொன்னது போலவே அறுபடை வீடுகளில் மலைமீது அமைந்திராத கோயில் இது மட்டுமே.

திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டு 150 அடி உயரமுடையதாகும்.

முருகனின் இடது கையில் தாமரை மலர் மற்றும் ஜடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கிறார்.

முருகனின் பின் புறம் இடது சுவரில் முருகன் பூஜை செய்ததாக கூறப்படும் லிங்கம் ஒன்று உள்ளது.

அதற்கு முதலில் பூஜை செய்த பின் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது.

இரு முருகன் :

சூரனை வதைத்த முருகன் நான்கு கைகளுடன் சிவபூஜை செய்து ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கின்றார்.

அவரின் தவத்தை கலைத்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கென்று தனி பிரகாரம் கிடையாது. மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறார்.

மஞ்சள் நீராட்டு:

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில், தங்கள் ஊர் பெண் தெய்வானையை திருமணம் செய்ததற்காகவும், போர் முடிந்து முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுகின்றனர்.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

சில முனிவர்கள் உலக நலனை காக்க ஒரு புத்திரன் வேண்டும் என கருதி, ஐப்பசி மாத அம்மாவசையன்று தொடங்கி, 6 நாட்கள் யாகம் நடத்திருக்கின்றனர்.

கோயில் காலை 5 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் 9 கால பூஜை நடைப்பெறுகிறது.

கங்கை பூசை:

தினமும் மதிய உச்சிகால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு கங்கை பூஜை எனப்படுகிறது.

புத்தாடை:

தீபாவளிக்கு மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம்.

அதே போல இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணமுடித்திருப்பதால், இந்திரன் புத்தாடை எடுத்துத்தருவதாக நம்பப்படுகிறது.

ஆவணித்திருவிழா திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் காலை மற்றும் மாலையில் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர்.

அதேபோல் காலை மற்றும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கோவில் கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.

வைகாசி விசாகம்:

5ஆம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது.

காலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் – வள்ளியம்பாள் எழுந்தருளல், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இலை விபூதி பிரசாதம் இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது.

ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.

தினம் ஒரு திருக்கோயில்-திருச்செந்தூர்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...