MP ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா

Date:

Share post:

MP ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா

எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜாஇசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சட்டமன்றங்களில் இருந்து மாநிலங்களவைக்கு அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

இருப்பினும் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்குபவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மத்திய அரசு சிலரை எம்.பி யாக தேர்ந்தெடுக்கலாம்.

மாநிலங்களவையில் 12 எம்.பிகள் இப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இசைஞானி இளையராஜா

அன்னக்கிளி படத்தின் மூலமாக இசையமைப்பாளராக கால்பதித்த இளையராஜா சாதித்தவை ஏராளம்.

தனது இசையின் மூலமாக உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா இதுவரை 5 விருதுகளை வென்றிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ள இளையராஜாவை இந்திய அரசு 2010-ம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இதுவரையில் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ள இளையராஜாவை அவரது ரசிகர்கள் ராகதேவன் என்றும், இசைஞானி என்றும் கொண்டாடி வருகிறார்கள்.

மோடி வாழ்த்து

எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா

மாநிலங்களவையின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இசைஞானி இளையராஜாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இளையராஜாவின் மேன்மையான படைப்புகள் தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது.

அதேபோல அவரது வாழ்வும் ஊக்கமளிக்க கூடியது. எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து மகத்தான சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் ராஜ்யசபா நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹைலைட்ஸ்:
  • இளையராஜா மாநிலங்களவை எம்பியாக நியமனம்
  • இளையராஜாவுக்கு மோடி வாழ்த்து
  • தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் எம்பியாக நியமனம்

மாநிலங்களவையில் மொத்தமுள்ள எம்பிக்களில் 12 பேரை குடியரசுத் தலைவர் தமது அதிகாரத்துக்கு உட்பட்டு உறுப்பினர்களாக நியமிக்கலாம்.

இதன்படி,தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைமுறை தலைமுறையாக மக்களின் மனம் கவர்ந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா என்றும், எளிய பின்னணியில் இருந்து வந்து உயர்ந்த சாதனைகளை படைத்தவர்’ எனவும் மோடி தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ரஜினி வாழ்த்து:

MP ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா

எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா

எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று அவர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மோடியும் அம்பேத்கரும்” என்ற தலைப்பிலான புத்தகம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதி இருந்த இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது தவறானது என்று சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு எதிராக கருத்துகள் பகிரங்கமாக பதிவிடப்பட்டன.

அதே சமயம், இளையராஜாவின் கருத்து சரியானது எனவும் அவருக்கு ஆதரவு குரல்களும் ஒலித்தன.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து தான் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறமாட்டேன் என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில். தற்போது அவர் எம்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...