சனீஸ்வரன்

Date:

Share post:

சனீஸ்வரன் (शनि, Śani) என்பவர் இந்து சோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் – சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.

சனி தேவன்
சனீஸ்வரன்
மந்தாகரன் – மந்தமானவன் (மெதுவானவன்)
சாயாபுத்ரன் – சாயையின் மகன் (சாயபுத்ரா)
இவ்வாறு பல்வேறு பெயர்கள் சனீஸ்வரன் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே ஆவார்.

சூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.

இதையடுத்து சந்தியா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனுடன் வாழ்ந்து வந்தார். சாயாவிற்கு சனி என்ற மகன் பிறந்தார். நிழலின் மகனாகப் பிறந்ததால் சனி கருமை நிற தோற்றத்துடன் இருந்தார். அதைக் கண்ட சூரியன் சனியை தன் புதல்வனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அப்போது சாயா கண்ணீர் விட்டார். அதைக் கண்டு கோபமடைந்த சனி தன் வக்கிர பார்வையை சூரியன் மீது செலுத்தினார். அப்போது சூரியன் மீது கிரகணம் ஏற்பட்டது. சனியின் சக்தியைக் கண்டு வியந்த சூரிய தேவர் சிவபெருமானிடம் சனியைப் பற்றி கேட்டார். அதற்கு சிவபெருமான் தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கவே சனி பிறந்துள்ளதாகக் கூறினார். இதனால் மகிழ்ந்த சூரியன், சனியைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொண்டார். சனி வளர்ந்த பிறகு தன் பொறுப்பை உணர்ந்து கொண்டார். பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். இவரது வக்கிர பார்வையின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை என்பர்.

முக்கிய கோயில்கள்:
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால், புதுச்சேரி
குச்சனூர் சனீஸ்வரன் கோயில், தேனி மாவட்டம், தமிழ்நாடு
சனீசுவரன் ஆலயம் திருகோணமலை, திருகோணமலை, இலங்கை

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...