கல்வி செல்வமே இன்றியமையாதது!

Date:

Share post:

கல்வி செல்வமே இன்றியமையாதது!

கல்வி

 

கல்வி ஒன்றுதான் இந்த சமூக முன்னேற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் இன்றியமையாதது.

ஒருவருக்கு கிடைக்கும் காசு பணத்தை விட சிறப்பான கல்வி கிடைத்தால் அவர்களுடைய வாழ்க்கையில் சால சிறந்தது வேறொன்றும் கிடையாது.

இந்த சூழ்நிலையில் கல்வி எங்கு அரிதாக இருக்கிறதோ அங்கெல்லாம் கல்வியை கொண்டுபோய் சேர்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்த சமுத்ரா தேவி என்ற சிங்க தமிழச்சி.

‘‘என்னோட அப்பா வழிகாட்டுதல்தான் இந்த மாதிரியான செயல்பாடுகளில் முதலில் என்னை ஈடுபட தூண்டியது.

அப்ப தொடங்கிய பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கு. இப்ப இருக்குற காலத்துல எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கு.

அதுக்கெல்லாம் எப்படி தீர்வு காண முடியுமான்னு பார்த்தா, கல்விதான் ஒரே வழி. கல்வி மட்டும் எல்லோருக்கும் கிடைச்சிட்டா அவங்களுக்கான தேடலும், இந்த வாழ்வின் மீதான புரிதலும் ஏற்பட்டு விடும்.

அதன் பிறகு அவர்களுக்கான வாழ்க்கையை அவங்களே பாத்துப்பாங்க.

இந்த ஒரு காரணம்தான் ஒவ்வொரு பெற்றோரையும் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது.

நான் படிக்கிற காலங்களில் என்னுள் தன்னம்பிக்கையை கொடுத்ததும் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியதும் இந்த கல்விதான்.

நமக்கு கிடைத்த கல்வி எல்லாருக்கும் கிடைத்துள்ளதான்னு சிந்திக்க ஆரம்பிச்சேன்.

அந்த எண்ணம்தான் அன்று முதல் கல்வியின் தேடலுக்கான பயணம் எனக்குள் ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்தது.

இந்த வாழ்க்கை நமக்கானது என்பதை விட யாவருக்குமானது என்ற எண்ணங்களே சிறப்பானது. அந்த எண்ணங்கள் உள்ளவர்கள் எதிர்வரும் தடைகளை எளிதாக உடைத்து தனக்கான இலக்கையும் அடைந்து விடுவர்.

ஏனென்றால் அந்த பாதைகள் எப்பொழுதும் அவர்களுக்கானது.

அதோடு கடந்த காலங்களில்  ஆசிரியராக வேலை பார்த்தபோது மாணவ, மாணவிகளிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்புகள் மூலமாக எல்லா விதமான சூழ்நிலைகளிலும் மாணவர்களுக்கு கல்வி எங்கே மறுக்கப்படுகிறது, அவங்களுக்கான தேவைகள் என்ன என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொருவரிடமும் பேச ஆரம்பித்து தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்கிய பயணம் நெடுந்தூர பயணமாக மாறியது.

காசு, பணம் கொடுத்து எவ்வளவு உதவி செஞ்சாலும் ஒருத்தருக்கு ஒழுங்கான கல்வியை கொடுத்தாலே போதும்.

மற்றது எல்லாம் அவர்களை தேடி வரும். இதை நான் முழுமையாக நம்புகிறேன்.

அந்த பயணத்தில் அடிப்படை வசதியில்லாத எத்தனையோ கிராமங்களுக்கு சென்று இருக்கேன்.

கிராமத்தில் உள்ள பசங்க எல்லாரும் வீட்டு வேலையும் பார்த்துக் கொண்டு அருமையா படிக்கவும் செய்வாங்க.

அதே சமயம் குடும்பச்சூழல் காரணமாக படிக்க முடியாமல் வேலைக்கு போகும் பசங்களையும் நான் பார்த்திருக்கேன்.

இங்க நகர வாழ்க்கையை பொறுத்தவரை தனியார் பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும்.

இவங்க பள்ளிக்கு சென்றுவிட்டு டியூஷனும் போவாங்க. இவர்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால் படிக்க மட்டுமே அதிகமான நேரம் செலவிட முடிகிறது.

அதே சமயம் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கான கிடைக்கும் நேரம் மிகவும் குறைவு. காரணம் படிப்பு மட்டுமில்லாமல் வருமானத்திற்காகவும் அவர்கள் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அந்த பசங்களுக்கு முழு நேரம் கல்வி கிடைக்க வேண்டும்னு யோசிச்சேன். அதன் முதல் அடிதான் அடிப்படை வசதி இல்லாத கிராமத்து மக்களிடம் அவர்களில் ஒருத்தரா பேச ஆரம்பிச்சேன்.

கல்வியின் பயன்கள் மற்றும் கல்வி கற்பதால் ஏற்படும் பலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்’’ என்றவரின் அயராத உழைப்பால் இப்போது அவர் பயணித்த கிராமத்து குழந்தைகள் அனைவரும் கல்வியினை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

‘‘ஒரு செயல் செய்யும் போது அது முழுமையாக அவர்களுக்கு சென்றடைந்ததா என்று கவனிக்க வேண்டும். என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

தன் குழந்தைக்கு அன்றாட கல்வி சாத்தியமாகுமான்னு யோசித்த பெற்றோர்கள், அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டார்கள். இன்று நான் கிராமத்திற்கு சென்றால், குழந்தைகள் எல்லாரும் ‘அம்மா வந்துட்டாங்க’ன்னு ஓடி வராங்க.

‘நல்லா படிக்கிறோம்… வேலைக்கு போறதில்லை, முழுநேரமும் படிக்க சொல்லிட்டாங்க எங்க வீட்ல’ன்னு அவங்க சொல்லும் போது எனக்குள் அந்த நொடி ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

இந்த காரியத்தை நான் தனி மனுஷியாக மட்டுமே சாதிக்கல. என் நண்பர்களும் எனக்கு உதவியாக கரம் கொடுத்தாங்க. எங்க கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.

வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவியா இருக்கணும்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்தது.

நம் மனதில் ஏற்படும் இது போன்ற நல்ல எண்ணங்களை காலம் தாழ்த்தாமல், அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதன் முதல் முயற்சி தான் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான கல்வியை கொடுத்தேன்.

அடுத்து 2009ல் என் தந்தையின் நினைவாக Dr.M.G.M.Edu & Char Trust என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கினேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியினை செய்து வருகிறேன்.

யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்படுகிறதோ அங்கு அவர்களுக்காக நான் இருப்பேன். கல்வி மட்டுமில்லாமல் பிள்ளைகளின் பெற்றோருக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் கல்வியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிந்துள்ளது.

இதன் மூலம் அவர்களிடம் ஒளிந்திருக்கும் வேறு திறமைகளையும் பார்க்க முடிகிறது. இங்குள்ள பசங்க ஜிம்னாஸ்டிக், ஃபுட்பால், கிரிக்கெட், இசை, நடனம் என பல திறமைகள் கொண்டுள்ளனர்.

இவங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா சாதிப்பாங்க. அதற்கான உதவியும் நாங்க வழங்கி வருகிறோம்.

மேலும் இயற்கை பேரிடர்கள் போது அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கிறோம்.

குழந்தைகளின் கல்வி ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் பெண்களின் முன்னேற்றத்தையும் கையில் எடுத்திருக்கோம்.

சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்னெடுத்து அது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறோம். மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகளும் வழங்குகிறோம்.

என்னுடைய இந்த செயலால் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் சந்தோஷம்தான்’’ என்றார் சமுத்ரா தேவி.

 

மஞ்சிமா மோகன் ஃபிட்னெஸ் சீக்ரெட் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/12/02/%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%af%86%e0%ae%b8%e0%af%8d/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...