ஜெய்சங்கரின் ரசிகர்களான 5 நடிகர்கள்

Date:

Share post:

ஜெய்சங்கரின் ரசிகர்களான 5 நடிகர்கள்

ஜெய்சங்கரின் ரசிகர்களான 5 நடிகர்கள்.. ஜென்டில்மேனாக வாழ்ந்து சாதித்த கௌபாய் கிங்

அந்தக் கால சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆருக்கு நிகராக ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் ஜெய்சங்கர்.

இவர் பல திரைப்படங்களில் சிஐடி ஆபிஸர், கௌபாய் உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

அதனாலேயே இவரை பலரும் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், கௌபாய் கிங் என்று அழைத்தனர்.

ஜெய்சங்கர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார்.

பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் இரசிகர்கள் அழைத்தனர்.

வெள்ளிக்கிழமை நாயகர்

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால்,

இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் ‘Friday hero’ (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த இவர் நிஜ வாழ்விலும் ஹீரோவாகவே வாழ்ந்து காட்டினார்.

அதனால் இவரை சக நடிகர்கள் பலருக்கும் மிகவும் பிடிக்குமாம். அதிலும் படப்பிடிப்பு தளத்தில் இவர் பெரிய நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகுவாராம்.

இதன் காரணமாகவே இவரின் மீது பலருக்கும் மிகுந்த அன்பும், மரியாதையும் இருந்தது.

அந்த வகையில் இவரின் மீது தீராத அன்பு கொண்டு அவருடைய ரசிகர்களாகவே மாறிய ஐந்து நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

சத்யராஜ்

இவர் ஜெய்சங்கருடன் இணைந்து சாவி, உங்க வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் சத்யராஜுக்கு ஜெய்சங்கர் மீது ஒரு தனி அன்பு உண்டு. இப்போதும் கூட அவர் ஜெய்சங்கர் குடும்பத்தினருடன் நட்புறவோடு தான் இருந்து வருகிறார்.

மம்முட்டி

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் ஜெய்சங்கர் உடன் இணைந்து தளபதி, மௌனம் சம்மதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது.

சித்ரா லட்சுமணன்

சித்ரா லட்சுமணன் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பன்முக திறமை கொண்டவர்.

பல வருடங்களாகவே இவருக்கு நடிகர் ஜெய்சங்கரின் மீது அளவு கடந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது.

அந்த வகையில் இவர் சிவாஜி, அம்பிகா நடிப்பில் உருவான வாழ்க்கை திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அதில் நடிகர் ஜெய்சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எம் என் நம்பியார்

எம் என் நம்பியார் பல திரைப்படங்களில் ஜெய்சங்கர் உடன் இவர் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்.

திரையில் எதிரிகளாக இவர்கள் நடித்திருந்தாலும் நிஜ வாழ்வில் நல்ல நண்பர்களாகவே பழகி வந்தனர்.

அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாகவே நல்ல நட்பு இருந்தது.

சிவகுமார்

சிவகுமார் இவர் ஜெய்சங்கர் உடன் இணைந்து இன்று நீ நாளை நான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் அவர் ஜெய்சங்கரை தன் உடன் பிறந்த சகோதரர் ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார்.

அந்த வகையில் சிவகுமார் ஜெய்சங்கரின் தீவிர ரசிகராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கரின் ரசிகர்களான 5 நடிகர்கள்

இது போன்று மேலும்  சினிமா தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...